திரவுபதியம்மனுக்கு சிறப்பு அலங்காரம்

மயிலம்: ரெட்டணை திரவுபதியம்மன் கோவிலில் அக்னி வசந்த விழாவையொட்டி, அம்மன் சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தார்.

மயிலம், அடுத்த ரெட்டணை கிராமத்தில், 18 நாட்கள் நடக்கும் அக்னி வசந்த விழா கடந்த ஜூன் 30ம் தேதி காப்பு கட்டுதல், கொடியேற்றத்துடன் துவங்கியது.

தினசரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், மகா தீபாரதனை நடந்தது. தொடர்ந்து, 7ம் நாள் சிறப்பு உற்சவம் நேற்று நடந்தது. இதில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார்.

இதனைத் தொடர்ந்து இரவு 9:00 மணிக்கு மலர்களினால் அலங்கரிக்கப்பட்ட உற்சவர் வீதியுலா நடந்தது.

விழாவில் வெங்கந்துார், நாரேரிகுப்பம், தென் புத்துார் உட்பட பல கிராமங்களிலிருந்து வந்திருந்த பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் சிறப்பாக செய்து வருகின்றனர். வரும் 18ம் தேதி மாலை 6:00 மணிக்கு தீமிதி திருவிழா நடக்கிறது.

Advertisement