நெரிசலுக்கு தீர்வை தரும் ரவுண்டானா ஆனா, சீக்கிரம் பணியை முடிக்கணும்!

சென்னிமலை: சென்னிமலை யூனியன் வெள்ளோட்டில், ௬ கோடி ரூபாய் மதிப்பில், சாக்கடை வசதி செய்து சாலை அகலப்படுத்தும் பணி, நெடுஞ்சாலை துறை சார்பில் நடந்து வருகிறது. இதன் தொடர்ச்சி-யாக வெள்ளோடு
- சென்னிமலை மற்றும் பெருந்துறை செல்லும் முக்கிய சந்திப்-பான வாரச்சந்தைக்கு அருகில் உள்ள சந்திப்பில் ரவுண்டானா அமைக்கும் பணி நடந்தது. இந்தப்பணி முடிந்த நிலையில் அங்-குள்ள சாலைகளை சீரமைத்து புதிதாக சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. ரவுண்டானா அமைக்கப்பட்டதால் வரும் காலங்களில் வெள்ளோடு பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேச-மயம் ரவுண்டானா பணியை, தாமதம் செய்யாமல் விரைந்து முடிக்க, வெள்ளோடு பகுதி மக்கள் கோரிக்கை
விடுத்துள்ளனர்.

Advertisement