போரில் இஸ்ரேல் என்னை கொல்ல முயற்சித்தது; ஈரான் அதிபர் பகீர் குற்றச்சாட்டு

டெஹ்ரான்: 12 நாட்கள் போரின் போது இஸ்ரேல் ராணுவம் தம்மை கொல்ல முயற்சித்ததாக ஈரான் அதிபர் மசூத் பெசெஸ்கியான் புதிய தகவலை வெளியிட்டு இருக்கிறார்.
கடந்த மாதம், ஈரான் மீது இஸ்ரேல் வான்வழியாக தாக்குதலை நடத்தியது. 12 நாட்கள் நிகழ்ந்த இந்த போரின் போது, இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கி, ஈரானில் உள்ள 3 அணுசக்தி மையங்கள் மீது தாக்குதலை நடத்தியது.
அதன் பின்னர், ஈரான், இஸ்ரேல் நாடுகள் போர் நிறுத்தத்தை ஏற்றுக் கொள்ள 12 நாட்கள் போர் முடிவுக்கு வந்தது. இந் நிலையில் போர் சூழலின் போது இஸ்ரேல் ராணுவம் தம்மை கொல்ல முயற்சித்ததாக ஈரான் அதிபர் மசூத் பெசெஸ்கியான் அதிரடியாக குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
பிரபல அமெரிக்க ஊடகவியலாளர் டக்கர் கார்ல்சன், மசூத் பெசெஸ்கியானை பேட்டி கண்டார். அப்போது இந்த குற்றச்சாட்டை வெளியிட்டு உள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறி இருப்பதாவது;
அவர்கள்(இஸ்ரேல்) முயற்சித்தனர். அதை நோக்கியே அவர்களின் நடவடிக்கைகள் இருந்தன. ஆனால் அதில் தோல்வியே கிடைத்தது. என் உயிருக்கு குறி வைத்தது அமெரிக்கா இல்லை, இஸ்ரேல் தான்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
மேலும்
-
நாமக்கல்லில் பஸ் மோதி பெங்களூரு காவலாளி பலி
-
காகித ஆலையில் மயங்கி விழுந்த டிரைவர் பலி
-
300 கிலோ ரேஷன் அரிசி கடத்தியவர் கைது
-
விஷ பாம்பு கடித்ததில் ஆபத்தான சிறுவன் 10 நாள் சிகிச்சைக்கு பின் நலம்
-
அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆனி பிரம்மோற்சவ கொடியேற்றம்
-
வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துாரில் 18 ஏரிகள் வறண்டன; விவசாயிகள் கவலை