பத்மினி, நந்திதா அபாரம் * செஸ் உலக கோப்பை தொடரில்...

பதுமி: ஜார்ஜியாவில் பெண்களுக்கான செஸ் உலக கோப்பை தொடர் நடக்கிறது. 46 நாடுகளில் இருந்து 107 பேர் பங்கேற்கின்றனர். மொத்த பரிசுத் தொகை ரூ. 6 கோடி. இதில் 'டாப்-3' இடம் பெறுபவர்கள், உலக சாம்பியன்ஷிப் தகுதிப் போட்டியில் ('கேண்டிடேட்ஸ்' செஸ்) பங்கேற்கலாம்.
'நாக் அவுட்' முறையிலான இத்தொடரில் இந்தியாவின் ஹம்பி, ஹரிகா, வைஷாலி, திவ்யா நேரடியாக இரண்டாவது சுற்றில் பங்கேற்க உள்ளனர். முதல் சுற்றில் இந்தியாவின் பத்மினி, சீனாவின் லான்லின் ஜங்கை சந்தித்தார். முதல் போட்டியில் வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய பத்மினி, 56 வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். தொடர்ந்து இரண்டாவது போட்டியில் சாதித்த பத்மனி 2.0-0 என வென்று, அடுத்த சுற்றுக்குள் நுழைந்தார்.
மற்றொரு போட்டியில் இந்தியாவின் நந்திதா, அனாஹி ஆர்டிஸ் (ஈகுவடார்) மோதினர். இதில் நந்திதா, 2-0 என வெற்றி பெற்றார். மற்றொரு முதல் சுற்றில் இந்தியாவின் வந்திகா, 1.5-0.5 என துர்க்மெனிஸ்தானின் லாலாவை சாய்த்தார். இந்தியாவின் கிரண் மணிஷா, 0.5-1.5 என சீனாவின் யூஜினிடம் தோல்வியடைந்தார்.
மேலும்
-
துப்பாக்கிச்சூடு அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை? மா., கம்யூ., கேள்வி
-
கொலையான காவலாளி தம்பியிடம் விஜய் விசாரிப்பு
-
தேர்தல் வாக்குறுதி 100க்கு 100 நிறைவேற்ற முடியாது: திருமாவளவன்
-
பறிமுதல் நகையை 'அபேஸ்' செய்தால் சஸ்பெண்ட்: போலீசாருக்கு எச்சரிக்கை
-
'போலீஸ்கிட்டயா போட்டு தர்றீங்க' வீடு புகுந்து தந்தை, மகனுக்கு வெட்டு
-
பா.ஜ., ஆர்ப்பாட்டத்தில் கூட்டம் குறைவு; மாவட்ட தலைவர்கள் தடுமாற்றம்