செஸ்: குகேஷ் 3வது இடம்

ஜாக்ரெப்: கிராண்ட் செஸ் தொடரின் 10வது சீசன் (மொத்தம் 5 தொடர்) தற்போது நடக்கிறது. இதன் மூன்றாவது தொடர் குரோஷியாவில் நடந்தது. இந்தியாவின் குகேஷ், பிரக்ஞானந்தா, நார்வேயின் மாக்னஸ் கார்ல்சன் உட்பட 10 பேர் பங்கேற்றனர். முதலில் நடந்த 'ரேபிட்' முறையிலான போட்டியில் குகேஷ், 14 புள்ளியுடன் முதலிடம் பிடித்தார். போலந்தின் ஜான் டுடா (11), கார்ல்சன் (10) 2, 3வது இடம் பெற்றனர்.
அடுத்து 'பிளிட்ஸ்' (அதிவேகம்) முறையில் போட்டி நடந்தது. இதில் கார்ல்சன் 12.5 புள்ளியுடன் முதலிடம் பெற்றார். அமெரிக்காவின் வெஸ்லே (12), உஸ்பெகிஸ்தானின் நாடிர்பெக் (12) அடுத்த இரு இடம் பெற்றனர். 18 சுற்றில் 4 வெற்றி, 3 'டிரா' செய்த குகேஷ் (5.5), 11ல் தோற்றதால் கடைசி இடம் (10) பிடித்தார்.
ரேபிட், பிளிட்ஸ் என ஒட்டு மொத்தமாக, கார்ல்சன் 22.5 புள்ளியுடன் சாம்பியன் ஆனார். வெஸ்லே (20) 2வது இடம் பெற்றார். குகேஷிற்கு (19.5) மூன்றாவது இடம் கிடைத்தது. பிரக்ஞானந்தா (15) 9வது இடம் பெற்றார்.
மேலும்
-
திரவுபதியம்மன் கோவில் கும்பாபிேஷகம்
-
ரூ.6.72 கோடி செலவில் குறுகிய பாலங்கள் புனரமைப்பு பணி; முதல்வர் ரங்கசாமி துவக்கி வைப்பு
-
வேளாண் பல்கலை டிப்ளமோ தரவரிசை பட்டியல் வெளியீடு
-
4ம் வட்டம் அளவிலான மாணவர் தின விழா போட்டிகள் துவக்கம்
-
'பாதுகாப்பு மற்றும் விண்வெளி உற்பத்தி மையமாகும் கோவை'
-
சந்திரமதி அரிச்சந்திர கோவில் கும்பாபிேஷகம்