'பாதுகாப்பு மற்றும் விண்வெளி உற்பத்தி மையமாகும் கோவை'

கோவை; குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியின் குமரகுரு தொழில்துறை ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க மையம், கொடிசியா பாதுகாப்பு புத்தாக்கம் மற்றும் அடல் இன்குபேஷன் மையம்,இந்திய வானுார்தி சங்கம் சார்பில், 2025ம் ஆண்டுக்கான பாதுகாப்பு மற்றும் விண்வெளித் துறை மாநாடு நடந்தது.
பாதுகாப்பு மற்றும் விண்வெளித் துறையில் உள்நாட்டு தொழில்நுட்ப மேம்பாட்டை ஊக்குவிக்கவும், கோவை பாதுகாப்பு வழித்தடத்தில் ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கிலும் இம்மாநாடு நடத்தப்பட்டது.
மாநாட்டில், டி.ஆர்.டி.ஓ.,முன்னாள் தலைவர் சதீஷ் ரெட்டி பேசுகையில், ''அடுத்த இரண்டு, மூன்று ஆண்டுகளில் உள்நாட்டு பாதுகாப்பு உற்பத்தி, மூன்று மடங்காக உயரும். ஒரு பெரிய பாதுகாப்பு மற்றும் விண்வெளி உற்பத்தி மையமாக, கோவை உருவெடுக்கத் தயாராக உள்ளது,'' என்றார்.
லெப்டினன்ட் ஜெனரல் கரண்பீர் சிங் பிரார், ஐ.ஐ.டி., பாலக்காடு இயக்குனர் சேஷாத்ரி சேகர், டி.ஆர்.டி.ஓ., எதிர்கால தொழில்நுட்ப மேலாண்மை இயக்குனரகத்தின் முதன்மை விஞ்ஞானி மற்றும் இயக்குனர் ரஞ்சனா நல்லமல்லி, குமரகுரு தொழில்நுட்பக் கல்லுாரியின் புத்தாக்க மைய இயக்குனர் வசந்தராஜ், கொடிசியா பாதுகாப்பு புத்தாக்கம் மற்றும் அடல் இன்குபேஷன் மைய இயக்குனர் சுந்தரம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மேலும்
-
கெம்கா கொலையில் தொடர்புடையவர் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை; பீஹார் போலீஸ் நடவடிக்கை
-
மருத்துவமனைகளில் 4,000 பணியிடங்கள் சுகாதார சங்கம் வாயிலாக நிரப்ப உத்தரவு
-
தர வரிசை பட்டியலில் திருச்சி விமான நிலையம் முதலிடம்
-
இன்றைய மின் தடை
-
அமைதிக்கான நோபல் பரிசுக்கு அதிபர் டிரம்ப் பெயரை பரிந்துரை செய்தார் இஸ்ரேல் பிரதமர்
-
திருவள்ளூர் புகார் பெட்டி