வேளாண் பல்கலை டிப்ளமோ தரவரிசை பட்டியல் வெளியீடு
கோவை; கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலை, டிப்ளமோ தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
வேளாண் பல்கலையில் வழங்கப்படும் வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் வேளாண் பொறியியல் பட்டயப்படிப்புகளுக்கு 1,240 இடங்களுக்கான மாணவர் சேர்க்கைக்கு, 2,430 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில், 552 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. 1,878 பேர் தரவரிசைக்கு தகுதி பெற்றனர்.
மாற்றுத்திறனாளி இட ஒதுக்கீட்டில், 30 இடங்களுக்கு 14 பேர் விண்ணப்பித்துள்ளனர். தரவரிசைப் பட்டியலில் உள்ள, 1878 இடங்களுக்கு பிற்படுத்தப்பட்டோர் பிரிவில்380 பேரும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் 706, ஆதிதிராவிடர் 635, அருந்ததியர் 68, பொது 3, பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியர் 21, பழங்குடியினர் 65 பேரும் தகுதி பெற்றுள்ளனர்.
உயிரியல் பாடப்பிரிவில் 195 கட் ஆப் மதிப்பெண்ணுடன், பிரவின் முதலிடம் பிடித்துள்ளார். கதிர் (194.50), ஜெயவர்மன் (193) ஆகியோர் முறையே, 2,3ம் இடங்களைப் பிடித்துள்ளனர்.
கணிதப்பாடப்பிரிவில்ஜெயவர்மன் (196), கார்த்திகேயன் (193), இர்பானா ஷாஜிதா (189) ஆகியோர் முறையே முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளனர்.
மேலும்
-
மருத்துவமனைகளில் 4,000 பணியிடங்கள் சுகாதார சங்கம் வாயிலாக நிரப்ப உத்தரவு
-
தர வரிசை பட்டியலில் திருச்சி விமான நிலையம் முதலிடம்
-
இன்றைய மின் தடை
-
அமைதிக்கான நோபல் பரிசுக்கு அதிபர் டிரம்ப் பெயரை பரிந்துரை செய்தார் இஸ்ரேல் பிரதமர்
-
திருவள்ளூர் புகார் பெட்டி
-
பலத்த பாதுகாப்புடன் இன்று தொடங்கியது கண்டதேவி கோவில் தேரோட்டம்!