திறக்கவுள்ள புதிய பஸ் ஸ்டாண்டில் ஆட்டோ நிறுத்த அனுமதி கோரி மனு

கரூர், தற்போது திறக்கப்படவுள்ள புதிய பஸ் ஸ்டாண்ட்டில், ஆட்டோ நிறுத்த அனுமதி வழங்க வேண்டும் என, ஐ.என்.டி.யு.சி., தேசிய ஆட்டோ ரிக்ஷா ஓட்டுனர்கள் சங்க தலைவர் சந்தனகுமார் தலைமையில், கரூர் கலெக்டரிடம் மனு அளித்தனர்.

அதில், கூறியிருப்பதாவது:

கரூரில், தேசிய ஆட்டோ ரிக்ஷா ஓட்டுனர்கள் சங்கம், 25 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இதில், 70க்கும் மேற்பட்ட நபர்கள் உறுப்பினராக உள்ளனர். இந்நிலையில், கரூர் திருமாநிலையூரில் புதிய பஸ் ஸ்டாண்ட் திறக்கப்படவுள்ளது. இடமாறுதல் காரணமாக, எங்கள் வாழ்வதாரம் பாதிக்கப்படும்.
புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில் ஆட்டோ ஸ்டாண்ட் வைக்க அனுமதி வழங்க வேண்டும். அப்போதுதான், ஆட்டோ டிரைவர்களால் தொடர்ந்து பிழைப்பு நடத்த முடியும். எனவே வாழ்வாதாரத்தை கருதில் கொண்டு, ஆட்டோ நிறுத்த அனுமதி வழங்க வேண்டும்.
இவ்வாறு, கூறப்பட்டுள்ளது.

Advertisement