திருக்களாப்பட்டி கோயில் கும்பாபிஷேகம்

திருப்புத்துார்: திருப்புத்துார் ஒன்றியம் திருக்களாப்பட்டி சித்தி விநாயகர் கோயில் கும்பாபிேஷகம் நடந்தது.

இக்கோயிலுக்கும், கோயில் வளைவிற்கும் கிராமத்தினரால் திருப்பணி நடந்தது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஜூலை 6 மாலை யாகசாலை பூஜை துவங்கி முதற்கால யாகபூஜை நடந்தது.

பூஜைகளை தமிழ்வழியில் அருணகிரி சிவாச்சாரியார் தலைமையில் சிவாச்சாரியார்கள் நடத்தினர்.

நேற்று காலை 7:00 மணிக்கு இரண்டாம் காலயாக பூஜை துவங்கியது பூஜை நிறைவுக்கு பின் தீபாராதனை நடந்து கடங்கள் சிவாச்சாரியார்களால் விமானத்திற்கு புறப்பாடு ஆனது. தொடர்ந்து காலை 10:15 மணிக்கு கும்பாபிஷேகம் நடந்தது.

தொடர்ந்து சுவாமிக்கு மகா அபிஷேகம் நடந்து திருப்பட்டு சார்த்தி, தீபாராதனை நடந்தது. சுற்று வட்டாரக் கிராமத்தினர் பங்கேற்றனர்.

தேவகோட்டை



தேவகோட்டையில் கலங்காது கண்ட விநாயகர்கோயிலில் ஐந்நுாற்றீஸ்வரர் மற்றும் பெரியநாயகி அம்மன் கோயிலில்திருப்பணி நடைபெற்று வந்தது. பணிகள் நிறைவுற்று கும்பாபிஷேகம் நடந்தது.

முன்னதாக சிவமணி சிவாச்சாரியார் தலைமையில் கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, லட்சுமி பூஜை உட்பட சிறப்பு பூஜைகளும் தொடர்ந்து ஆறு கால யாக சாலை பூஜைகளும் பூர்ணாகுதி நடைபெற்றது.

நேற்று கலங்காது கண்ட விநாயகர் கோயில் கோபுரம், மூலவர் விமானம், ஐந்நூற்றீஸ்வரர், பெரிய நாயகி அம்மன் சந்நிதி விமானங்களுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. மாலையில் சுவாமிகளுக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது.

Advertisement