ரூ.12 லட்சத்துக்கு பருத்தி வர்த்தகம்
ஆத்துார், ஆத்துார் வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில், 12 லட்சம் ரூபாய்க்கு பருத்தி வர்த்தகம் நடந்தது.
ஆத்துார் வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், வாரந்தோறும் பருத்தி, மஞ்சள் ஏலம் நடந்து வருகிறது. நேற்று பருத்தி ஏலத்துக்கு ஆத்துார், தலைவாசல், கெங்கவல்லி, வீரகனுார், தம்மம்பட்டி, சின்னசேலம், பெரம்பலுார் பகுதிகளில் இருந்து, 184.59 குவிண்டால் பருத்தி விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
பி.டி., ரகம் பருத்தி குவிண்டால், 6,989 முதல், 7,819 ரூபாய்; டி.சி.ெஹச்., ரகம் குவிண்டால், 9,269 முதல், 10 ஆயிரத்து, 289 ரூபாய்; கொட்டுபருத்தி குவிண்டால், 3,689 முதல், 4,569 ரூபாய் என, 184.59 குவிண்டால் பருத்தி, 12 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது. கடந்த வாரத்தை விட பி.டி., ரகம் பருத்தி குவிண்டாலுக்கு, 300 ரூபாய் விலை குறைந்துள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
துப்பாக்கிச்சூடு அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை? மா., கம்யூ., கேள்வி
-
கொலையான காவலாளி தம்பியிடம் விஜய் விசாரிப்பு
-
தேர்தல் வாக்குறுதி 100க்கு 100 நிறைவேற்ற முடியாது: திருமாவளவன்
-
பறிமுதல் நகையை 'அபேஸ்' செய்தால் சஸ்பெண்ட்: போலீசாருக்கு எச்சரிக்கை
-
'போலீஸ்கிட்டயா போட்டு தர்றீங்க' வீடு புகுந்து தந்தை, மகனுக்கு வெட்டு
-
பா.ஜ., ஆர்ப்பாட்டத்தில் கூட்டம் குறைவு; மாவட்ட தலைவர்கள் தடுமாற்றம்
Advertisement
Advertisement