ரயில் சேவையில் மாற்றம்
போத்தனுார் ரயில்வே யார்டில் நடக்கும் பராமரிப்பு பணி காரணமாக மதுரை - கோவை இன்டர்சிட்டி ரயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
மதுரை - கோவை ரயில் (16722), ஜூலை 8 (இன்று), 10ல் போத்தனுார் வரை மட்டும் இயக்கப்படும். போத்தனுார் - கோவை இடையே ரத்து செய்யப்படுகிறது. ஜூலை 14, 16, 18, 20, 22, 25, 27, 29, 31ல் பொள்ளாச்சி வரை மட்டும் இயக்கப்படும். பொள்ளாச்சி - கோவை இடையே ரத்து செய்யப்படுகிறது.
ஜூலை 8, 10, 12, 22, 29ல் கோவை - மதுரை ரயில் (16721), பொள்ளாச்சியில் இருந்து மதியம் 3:30 மணிக்கு புறப்படும். கோவை - பொள்ளாச்சி இடையே ரத்து செய்யப்படுகிறது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement