மொபைல் போன் கட்டணம் 12% வரை உயர வாய்ப்பு

2

புதுடில்லி: இந்தாண்டு இறுதிக்குள், மொபைல் போன் கட்டணங்கள் 10 முதல் 12 சதவீதம் வரை உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


நாட்டின் மொபைல் போன் சந்தாதாரர்களின் எண்ணிக்கை, கடந்த மே மாதத்தில் 74 லட்சம் பயனர்கள் அதிகரித்து, கிட்டத்தட்ட 108 கோடியாக உயர்ந்துள்ளது. இது 29 மாத சாதனை.


மேலும், நிகர பயனர்கள் சேர்ப்பில் இது ஐந்தாவது மாத வளர்ச்சி. கடந்தாண்டு ஜூலை - நவம்பர் மாதங்களுக்கு இடையில் 2.1 கோடி சந்தாதாரர்கள் இழப்பிற்கு பின், தற்போது வளர்ச்சி கண்டுள்ளது.



தொடர்ச்சியான சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களை, கட்டண உயர்வுக்கு துாண்டியுள்ளது. நடப்பாண்டு இறுதிக்குள் தற்போதுள்ள கட்டணங்களில் இருந்து 10 முதல் 12 சதவீதம் வரை கட்டண உயர்வு இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இறுதியாக கடந்தாண்டு ஜூலையில் உயர்த்தப்பட்ட கட்டணம் 11 முதல் 23 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்புக்கு ஏற்ப, தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் சேவைகளை வழங்க வேண்டியிருப்பதால், இக்கட்டண உயர்வு அவசியமாக இருப்பதாக, நிறுவனங்கள் தரப்பில் கூறப்படுகிறது.



சந்தாதாரர் எண்ணிக்கை
74 லட்சம்

மொத்த சந்தாதாரர் எண்ணிக்கை

108 கோடி

Advertisement