பெண், சிறுமி பலாத்காரம்; இந்திய வம்சாவளிக்கு ' ஆயுள்'

1

லண்டன்; இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி மற்றும் 13 வயது சிறுமியை பலாத்காரம் செய்தது தொடர்பான வழக்கில், இந்திய வம்சாவளி இளைஞருக்கு, லண்டன் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.

ஐரோப்பிய நாடான பிரிட்டனின் லண்டனில் உள்ள பூங்கா ஒன்றில், கடந்தாண்டு அக்., 13ல், 20 வயது இளம் பெண் ஒருவரை, துப்பாக்கி முனையில் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி நடந்தது.

அதே பகுதியில் உள்ள மற்றொரு பூங்காவில், அதற்கடுத்த, 10 நாட்களில், 13 வயது சிறுமி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த இரண்டு வழக்குகளை விசாரித்த லண்டன் போலீசார், கடந்தாண்டு, அக்., 27ல் இந்திய வம்சாவளியான, நவ்ரூப் சிங், 24, என்ற இளைஞரை கைது செய்தனர்.

போலியாக தானே உருவாக்கிய துப்பாக்கியைக் காட்டி மிரட்டியது, பாலியல் பலாத்கார முயற்சி, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது போன்ற பிரிவுகளில் அவர் மீது வழக்கு தொடரப்பட்டது.

இதை விசாரித்த லண்டன் நீதிமன்றம், அவருக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளது. குறைந்தபட்சம், 14 ஆண்டுகள் அவர் சிறையில் இருக்க வேண்டும் என, உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement