அமைதிக்கான நோபல் பரிசுக்கு அதிபர் டிரம்ப் பெயரை பரிந்துரை செய்தார் இஸ்ரேல் பிரதமர்

வாஷிங்டன்: அமைதி மற்றும் பாதுகாப்பிற்காக டிரம்பின் முயற்சியை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பாராட்டியுள்ளார். அவர், டிரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என பரிந்துரைத்து உள்ளார்.
அமைதிக்கான நோபல் பரிசு பெறுவதற்கான தகுதி, வேறு எவரை காட்டிலும் தனக்கே இருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் நம்புகிறார். சமீபத்தில் அவர் நான் என்ன செய்தாலும் எனக்கு நோபல் பரிசு கிடைக்காது என அதிருப்தி தெரிவித்திருந்தார். டிரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசை வழங்க வேண்டும் என்று, நோபல் கமிட்டிக்கு பாகிஸ்தான் அரசாங்கம் சிபாரிசு செய்து இருந்தது.
இந்த நிலையில், உலக அமைதி மற்றும் பாதுகாப்பிற்காக டிரம்பின் முயற்சியை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பாராட்டியுள்ளார். அவர், டிரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என பரிந்துரைத்து உள்ளார். வெள்ளை மாளிகையில் நடந்த சந்திப்பின் போது டிரம்பிற்கு ஒரு நியமனக் கடிதத்தை வழங்கினார்.
"நோபல் பரிசுக் குழுவிற்கு நான் அனுப்பிய கடிதத்தை உங்களிடம் சமர்ப்பிக்க விரும்புகிறேன். அமைதிப் பரிசுக்கு உங்களை பரிந்துரைப்பது மிகவும் தகுதியானது. அதிபர் டிரம்ப் அதைப் பெற வேண்டும்" என்று நெதன்யாகு கூறினார். குறிப்பாக மத்திய கிழக்கில், நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில் டிரம்பின் தலைமையை இஸ்ரேல் பிரதமர் பாராட்டி உள்ளார்.












மேலும்
-
இந்தூர்- ராய்ப்பூர் இண்டிகோ விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு; அவசர தரையிறக்கம்!
-
பழம்பெரும் தெலுங்கு சினிமா பாடலாசிரியர் சிவசக்தி தத்தா மறைவு: சிரஞ்சீவி உள்ளிட்டோர் இரங்கல்
-
சுற்றுச்சூழலை வலியுறுத்தி சைக்கிள் பயணம்
-
மின்சார பஸ்களுக்கான சார்ஜ் ஏற்றும்போது திடீரென பேட்டரி வெடித்து 2 பேர் காயம்
-
எண்கள் சொல்லும் செய்தி
-
ஆடலாம், பாடலாம், ஆனால் இப்படி செய்யலாமா ? நெட்டிசன்கள் கலாய்ப்பில் சிக்கினார் சிங்கர் நேகா