ஆண்டிபட்டி அருகே போதை மாத்திரை கஞ்சா வைத்திருந்த மூன்று பேர் கைது
ஆண்டிபட்டி: தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே கஞ்சா, போதை மாத்திரைகள் வைத்திருந்த அரப்படித்தேவன்பட்டியைச் சேர்ந்த கணபதி 32, மதன்குமார் 31, காமேஸ்வரன் 25, ஆகிய மூன்று பேரை போலீசார்கைது செய்தனர்.
மதுரை -- தேனி மெயின் ரோடு அரப்படித்தேவன்பட்டி அருகே க.விலக்கு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்தஆட்டோவை மறித்து விசாரித்தனர். ஆட்டோவில் இருந்தவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினர்.
சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களிடம் மேற்கொண்ட சோதனையில் மதமதப்பு ஏற்படுத்தும் 'டேப் பென்டா டெல் ஹைட்ரோகுளோரைடு ' 100 எம்.ஜி., அளவு கொண்ட 30 மாத்திரைகள், இன்சுலின் ஊசிகள் 6, சோடியம் குளோரைடு திரவ ஊசி மருந்து உள்ள பிளாஸ்டிக் பாட்டில், 2 பொட்டலங்கள் கொண்ட 24 கிராம் கஞ்சா ஆகியவை இருந்துள்ளன.
விசாரணையில் போதை மாத்திரைகள், கஞ்சா வைத்திருந்த அரப்படித்தேவன்பட்டியைச் சேர்ந்த கணபதி 32, மதன்குமார் 31, காமேஸ்வரன் 25, என்பதும், கஞ்சா,போதை மாத்திரைகளை விற்பனைக்கு வைத்திருந்ததும் தெரிய வந்தது. அவர்கள் வந்த ஆட்டோவையும், போதை மாத்திரைகள், கஞ்சா, ஊசிமருந்துகள் ஆகியவற்றை பறிமுதல் செய்து க.விலக்கு போலீசார் மூவரையும் கைது செய்தனர். இதில் தொடர்புடையவர்கள் யார் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மேலும்
-
மருத்துவமனைகளில் 4,000 பணியிடங்கள் சுகாதார சங்கம் வாயிலாக நிரப்ப உத்தரவு
-
தர வரிசை பட்டியலில் திருச்சி விமான நிலையம் முதலிடம்
-
இன்றைய மின் தடை
-
அமைதிக்கான நோபல் பரிசுக்கு அதிபர் டிரம்ப் பெயரை பரிந்துரை செய்தார் இஸ்ரேல் பிரதமர்
-
திருவள்ளூர் புகார் பெட்டி
-
பலத்த பாதுகாப்புடன் இன்று தொடங்கியது கண்டதேவி கோவில் தேரோட்டம்!