எட்டு நாட்களுக்குப் பின் 4 லட்சத்தீவு மீனவர்களை இலங்கை மீட்டது
ராமேஸ்வரம்:எட்டு நாட்களாக நடுக்கடலில் உணவின்றி தவித்த லட்சத்தீவு மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படையினர் மீட்டனர்.
ஜூன் 28ல் மாலத்தீவு அருகே மினிகாய் தீவில் இருந்து விசைப்படகில் 4 மீனவர்கள் அரபிக் கடலில் மீன்பிடிக்க சென்றனர். மீன்பிடித்து விட்டு மறுநாள் கரை திரும்ப வேண்டும். மீனவர்கள் திரும்பாததால் பதட்டம் அடைந்த உறவினர்கள் இந்திய கடற்படையினரிடம் புகார் தெரிவித்தனர்.
இந்திய கடற்படை அதிகாரிகள் மீனவர்களை மீட்கும்படி இலங்கை கடற்படையை வலியுறுத்தினர். சர்வதேச கடல் எல்லையில் இருநாட்டு கடற்படையும் தேடிய நிலையில் நேற்று முன்தினம் (ஜூலை 6) இலங்கை எல்லைக்குள் புகுந்த ஒரு படகை அந்நாட்டு கடற்படையினர் பிடித்து விசாரித்ததில் மினிகாய் தீவு மீனவர்கள் என தெரிந்தது.
படகில் இயந்திர கோளாறால் காற்றின் வேகத்தில் திசை மாறி இலங்கைக்குள் புகுந்ததாகவும், 8 நாட்களாக உணவின்றி குடிநீரை பருகியதாக மீனவர்கள் தெரிவித்தனர். பின் மீனவர்களுக்கு உணவு, குடிநீர் வழங்கிய இலங்கை வீரர்கள் கொழும்புக்கு அழைத்து சென்று முகாமில் தங்க வைத்தனர்.
மேலும்
-
மருத்துவமனைகளில் 4,000 பணியிடங்கள் சுகாதார சங்கம் வாயிலாக நிரப்ப உத்தரவு
-
தர வரிசை பட்டியலில் திருச்சி விமான நிலையம் முதலிடம்
-
இன்றைய மின் தடை
-
அமைதிக்கான நோபல் பரிசுக்கு அதிபர் டிரம்ப் பெயரை பரிந்துரை செய்தார் இஸ்ரேல் பிரதமர்
-
திருவள்ளூர் புகார் பெட்டி
-
பலத்த பாதுகாப்புடன் இன்று தொடங்கியது கண்டதேவி கோவில் தேரோட்டம்!