பைக் - லாரி மோதிய விபத்தில் தம்பதி பலி

குளித்தலை: கரூர் அருகே பைக் -- லாரி மோதிய விபத்தில், கணவன் - மனைவி உயிரிழந்தனர்.

கரூர் மாவட்டம், கீழ பஞ்சப்பட்டியை சேர்ந்தவர் ரமேஷ், 42; முன்னாள் ராணுவ வீரர். இவரது மனைவி கல்பனா, 31. இருவரும் நேற்று முன்தினம் பைக்கில், குஜிலியம்பாறை சென்று விட்டு, வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.

மோளப்பட்டி நெடுஞ்சாலை சின்ன முத்தம்பாடி பிரிவு ரோடு அருகில் வந்தபோது, எதிரே வேகமாக வந்த லாரி, பைக் மீது மோதியது. இந்த விபத்தில், ரமேஷ், கல்பனா படுகாயமடைந்தனர். அவர்களை மீட்டு, கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரமேஷ் உயிரிழந்தார்.

மேல் சிகிச்சைக்காக, தனியார் மருத்துவமனையில் கல்பனா அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரும் நேற்று காலை உயிரிழந்தார்.

Advertisement