தஞ்சாவூருக்கு சுற்றுலா வந்த இடத்தில் சோகம்; கார் மீது சரக்கு வாகனம் மோதி 4 பேர் பலி!

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் கார் மீது சரக்கு வாகனம் மோதிய விபத்தில் சுற்றுலா வந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சாவூர் அருகே குருங்களூர் பகுதியில், தஞ்சாவூர் விக்கிரவாண்டி சாலையில் சுற்றுலாவுக்கு வந்தவர்கள் சென்று கொண்டிருந்த கார் மீது சரக்கு வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சென்னையைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். கும்பகோணத்தில் இருந்து தஞ்சாவூர் பெரிய கோயிலுக்கு சுற்றுலா வந்த போது விபத்து நிகழ்ந்துள்ளது.
உயிரிழந்தவர்கள் குமார், அவரது மனைவி ஜெயா, நீலவேணி, துர்கா என அடையாளம் காணப்பட்டுள்ளனர். குமாரின் மகள் மோனிஷா, மகன் ஸ்டாலின் மற்றும் சரக்கு வாகனம் டிரைவர் விக்னேஷ் ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாசகர் கருத்து (1)
Nada Rajan - TIRUNELVELI,இந்தியா
08 ஜூலை,2025 - 12:30 Report Abuse

0
0
Reply
மேலும்
-
பொது வேலை நிறுத்தத்தில் பங்கேற்றால்...: அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை
-
நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமின்
-
சீனா-நேபாள எல்லையில் மண் சரிவு: 17 பேர் மாயம்
-
'இந்தியன் 2, தக் லைப்' தோல்விகள்: 'இந்தியன் 3' எதிர்காலம் என்ன?
-
உலகின் 'பிசி'யான விமான நிலையங்கள்: டில்லிக்கு 9வது இடம்
-
வன மஹோத்சவம் - காவேரி கூக்குரல் சார்பில் தமிழகமெங்கும் நடைபெற்ற மரம் நடும் விழாக்கள்
Advertisement
Advertisement