வாலாங்குளம் படகு இல்லத்துக்கு 'பூட்டு' அதிக கட்டண வசூல் ஆசைக்கு வேட்டு
கோவை: போதிய வருவாய் இல்லாததால், கோவை வாலாங்குளம் படகு இல்லத்தை மூட, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக இயக்குனர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ், உக்கடம் பெரியகுளம், வாலாங்குளம், கிருஷ்ணம்பதி குளம், செல்வம்பதி குளம், குறிச்சி குளம் ஆகியவை, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்டன. மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் இணைந்து, வாலாங்குளத்தின் கரைப் பகுதியில் படகு இல்லம் ஏற்படுத்தப்பட்டது. இந்த படகு இல்லத்துக்கு வருபவர்களுக்கு வாகனங்களை நிறுத்த, போதிய இடவசதி இல்லை. படகு சவாரிக்கு வருவோருக்கு, கழிப்பிட வசதிகளும் ஏற்படுத்தி தரவில்லை. தவிர, படகு சவாரிக்கான கட்டணமும் அதிகமாக நிர்ணயிக்கப்பட்டது.
பெடல் படகுகளை பயன்படுத்த, 30 நிமிடங்களுக்கு ரூ.300 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. துடுப்பு படகிற்கு ரூ.350, மோட்டார் படகுகளுக்கு ரூ.1,000 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. இதனால், படகு சவாரிக்கு வருவோர் எண்ணிக்கை, நாளுக்கு நாள் குறைந்தது. வார இறுதி நாட்களில் மட்டுமே கணிசமாக கூட்டம் இருந்தது. இருந்தும், வருவாய் குறைந்ததால், படகு இயக்குவோர், டிக்கெட் வழங்குபவர்களுக்கு ஊதியம் தர முடியாத நிலை ஏற்பட்டது.
இந்நிலையில், சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெளியாகும் கழிவுநீர், வாலாங்குளத்தையே அடைவதால், ஆகாயத் தாமரை சூழ்ந்து, படகு சவாரி மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் படகு இல்லத்தை மூட, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக இயக்குனர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த இடத்தை மீண்டும் தங்கள் வசம் எடுத்துக் கொள்ள, கோவை மாநகராட்சி கமிஷனருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
மேலும்
-
திருச்சி விமான நிலையத்தில் 11.8 கிலோ உயர்ரக கஞ்சா பறிமுதல்; இதன் மதிப்பு ரூ.11.8 கோடி!
-
பீஹாரில் அரசு வேலைவாய்ப்புகளில் பெண்களுக்கு 35 % இட ஒதுக்கீடு; முதல்வர் நிதிஷ் அறிவிப்பு
-
இந்தூர்- ராய்ப்பூர் இண்டிகோ விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு; அவசர தரையிறக்கம்!
-
பழம்பெரும் தெலுங்கு சினிமா பாடலாசிரியர் சிவசக்தி தத்தா மறைவு: சிரஞ்சீவி உள்ளிட்டோர் இரங்கல்
-
சுற்றுச்சூழலை வலியுறுத்தி சைக்கிள் பயணம்
-
மின்சார பஸ்களுக்கான சார்ஜ் ஏற்றும்போது திடீரென பேட்டரி வெடித்து 2 பேர் காயம்