ஸ்ரீவித்யா தொண்டு அறக்கட்டளை ஆண்டு விழா தொம்மலுாரில் துவக்கம்

தொம்மலுார் : ஸ்ரீவித்யா தொண்டு அறக்கட்டளை 44ம் ஆண்டு விழா, வேத அறிஞர்கள் கவுரவிப்பு மஹோத்சவம் நேற்று துவங்கியது.
பெங்களூரு தொம்மலுார் கிருஷ்ணா ரெட்டி லே - அவுட்டில் உள்ள ஸ்ரீ சூர்ய நாராயண சுவாமி கோவில் கல்யாண மண்டபத்தில் நேற்று ஸ்ரீவித்யா தொண்டு அறக்கட்டளை 44ம் ஆண்டு விழா, வேத அறிஞர்கள் கவுரவிப்பு மஹோத்சவம், ஸ்ரீசாதுராம் சுவாமிகளின் 25ம் ஆண்டு ஆராதனை இரண்டாம் பாகம் விழா நடந்தது.
விழா மேடையில், ஸ்ரீவித்யாவின் ஒரு தோற்றமான ராஜராஜேஸ்வரி, ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ ஆதி சங்கராச்சாரியார் படங்கள்; நவ கன்னிகைகள் சிலைகள் அலங்கரிக்கப்பட்டிருந்தன.
விழாவின் முதல் நாளான நேற்று காலையில், வேதம் பயிலும் 25 மாணவர்கள் கவுரவிக்கப்பட்டனர்.
கணபதி ஹோமம் நடத்தப்பட்டது. அதை தொடர்ந்து, 11 அறிஞர்கள் வேதம் ஓதினர். பக்தவச்சலம் பாகவதர், பாகவத மூல பாராயணம் நடத்தினார். பின், 200 வேத அறிஞர்கள் கவுரவிக்கப்பட்டனர்.
தொடர்ந்து, விபூதிபுரத்தில் உள்ள வீர சிம்மாசன மடத்தில் உள்ள மாணவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் 300 மகளிர், லலிதா சஹஸ்ரநாம பாராயணம் செய்தனர். தீபாராதனை காண்பிக்கப்பட்டு, பகவத் பிரசாதம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்காக சென்னை, திருவண்ணாமலை, கும்பகோணம்; கேரளாவின் திருவனந்தபுரம், கர்நாடகாவின் மைசூரு, ஷிவமொக்கா, உடுப்பி, மங்களூரில் இருந்து பலர் வந்திருந்தனர்.
ஸ்ரீவித்யா தொண்டு அறக்கட்டளை 44ம் ஆண்டு விழாவில், 200 வேத அறிஞர்கள் கவுரவிக்கப்பட்டனர்.
மேலும்
-
கெம்கா கொலையில் தொடர்புடையவர் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை; பீஹார் போலீஸ் நடவடிக்கை
-
மருத்துவமனைகளில் 4,000 பணியிடங்கள் சுகாதார சங்கம் வாயிலாக நிரப்ப உத்தரவு
-
தர வரிசை பட்டியலில் திருச்சி விமான நிலையம் முதலிடம்
-
இன்றைய மின் தடை
-
அமைதிக்கான நோபல் பரிசுக்கு அதிபர் டிரம்ப் பெயரை பரிந்துரை செய்தார் இஸ்ரேல் பிரதமர்
-
திருவள்ளூர் புகார் பெட்டி