ரூ.4.50 கோடி போதை பறிமுதல்; 3 பேர் கைது

ராஜனுகுண்டே : வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்த 4.50 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. நைஜீரியாவை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெங்களூரு ரூரல் அடிகனஹள்ளி கிராமத்தில் ஒரு வீட்டில் வசிக்கும், நைஜீரியாவை சேர்ந்த 3 பேர் போதை பொருள் விற்பதாக, ராஜனுகுண்டே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

நேற்று அந்த வீட்டிற்கு சென்று போலீசார் சோதனை நடத்தினர்.

கட்டிலுக்கு அடியில் மறைத்து வைத்திருந்த, அட்டை பெட்டியை எடுத்து பார்த்தபோது, அதில் எம்.டி.எம்.ஏ., போதை பொருள் இருந்தது தெரியவந்தது. 2.820 கிலோ போதைப் பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதன் சர்வதேச மதிப்பு 4.50 கோடி ரூபாய். இதுதொடர்பாக மூன்று பேரையும் கைது செய்தனர்.

மருத்துவ விசாவில் டில்லி வந்த மூன்று பேரும், பெங்களூரு வந்து போதை பொருள் விற்பனையில் ஈடுபட்டதும், அக்கம்பக்கத்தினருக்கு சந்தேகம் வராமல் இருக்க ஆயத்த ஆடை தொழிற்சாலைகளுக்கு சென்று, துணிகளை வாங்கி வந்து விற்பனை செய்ததும் தெரியவந்தது.

Advertisement