ரேணுகாசாமி பாணியில் கலபுரகியில் கொலை 'மாஜி' கள்ளக்காதலி உட்பட நால்வர் கைது

கலபுரகி : சித்ரதுர்காவின் ரேணுகாசாமி கொலை செய்யப்பட்டதை போன்று, கலபுரகியிலும் ஒரு கொலை நடந்துள்ளது. இது தொடர்ப்பாக, முன்னாள் கள்ளக்காதலி உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
கலபுரகி நகரில் வசித்தவர் ராகவேந்திரா, 39. மார்ச் மாதத்தில் வீட்டில் இருந்து வேலைக்குச் சென்ற இவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. எப்போதும் வேலைக்கு சென்றால் திரும்புவதற்கு சில நாட்கள் ஆகும் என்பதால், குடும்பத்தினர் காத்திருந்தனர்.
இரண்டு மாதங்களாகியும் அவர் திரும்பவில்லை என்பதால், சந்தேகமடைந்த ராகவேந்திரா மனைவி சுரேகா, மே 25ல் கலபுரகி ஸ்டேஷன் பஜார் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். பல கோணங்களில் விசாரித்தபோது, ராகவேந்திராவுக்கு அஸ்வினி, 26, என்ற பெண்ணுடன் சில ஆண்டுகளாக கள்ளத்தொடர்பு இருந்தது தெரியவந்தது. தீவிர விசாரணையில் அஸ்வினியை பிடித்து விசாரித்தபோது, ராகவேந்திராவை தன் புதிய காதலருடன் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது:
ராகவேந்திராவுக்கும் அஸ்வினிக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. மனஸ்தாபத்தால் ராகவேந்திராவுடனான தொடர்பை அஸ்வினி துண்டித்துக் கொண்டார். குருராஜ், 36, என்பவருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. அவருடன் சுற்ற ஆரம்பித்தார்.
இது ராகவேந்திராவுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. அஸ்வினியை பின்தொடர்ந்து, தொல்லை கொடுக்க துவங்கினார். ஆபாச எஸ்.எம்.எஸ்., அனுப்பினார். தொந்தரவு நாளுக்கு நாள் அதிகரித்ததால் குருராஜிடம் கூறி ராகவேந்தராவை கொலை செய்ய அஸ்வினி சதி திட்டம் தீட்டினார்.
மார்ச் 12ம் தேதி, ராகவேந்திராவை அஸ்வினி போன் செய்து அழைத்துள்ளார். அவர் வந்தபோது, அங்கிருந்த குருராஜ், அஸ்வினி மற்றும் அவர்களது கூட்டாளிகளுடன் சேர்ந்து, காரில் ராகவேந்திராவை கடத்தினர்.
கலபுரகி கீர்த்தி நகரின் மயானத்துக்கு அழைத்துச் சென்று கட்டிப் போட்டு தாக்கினர். மண் வெட்டி, கடப்பாரை உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கியுள்ளனர். ராகவேந்திராவின் பிறப்புறுப்பில் உதைத்தபோது, அவர் உயிரிழந்தார். உடலை காரில் கொண்டு வந்து, ராய்ச்சூரின் சக்தி நகரில் உள்ள கிருஷ்ணா ஆற்றில் வீசிவிட்டு தப்பியுள்ளனர்.
ராகவேந்திராவின் உடலை, சக்தி நகர் போலீசார் மீட்டு, அடையாளம் தெரியாத உடலாக கருதி எரித்துள்ளனர். கொலை தொடர்பாக குருராஜ், 36, அஸ்வினி, 26, லட்சுமிகாந்த் மாலி பாட்டீல், 28, அபிஷேக், 29, ஆகியோர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர்.
இவ்வாறு போலீசார் கூறினர்.
மேலும்
-
மருத்துவமனைகளில் 4,000 பணியிடங்கள் சுகாதார சங்கம் வாயிலாக நிரப்ப உத்தரவு
-
தர வரிசை பட்டியலில் திருச்சி விமான நிலையம் முதலிடம்
-
இன்றைய மின் தடை
-
அமைதிக்கான நோபல் பரிசுக்கு அதிபர் டிரம்ப் பெயரை பரிந்துரை செய்தார் இஸ்ரேல் பிரதமர்
-
திருவள்ளூர் புகார் பெட்டி
-
பலத்த பாதுகாப்புடன் இன்று தொடங்கியது கண்டதேவி கோவில் தேரோட்டம்!