பணமில்லா பரிவர்த்தனை : கண்டக்டர்களுக்கு ஊக்கப்பரிசு

விழுப்புரம் : தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் இயக் கப்படும் புறநகர், நகர பஸ்களில் பணமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
அதன் அடிப்படையில் பஸ் கண்டக்டர்கள் மின்னனு பயணச்சீட்டு இயந்திரம் மூலம் பயண கட்டணத்தை பெறுகின்றனர்.
இதையொட்டி, தமிழக அரசு போக்குவரத்து கழகம் விழுப்புரம் போக்குவரத்து கழகத்தில் உள்ள ஒவ்வொரு மண்டலத்தில் இருந்தும் கடந்த மாதத்தில் அதிக பணமில்லா பரிவர்த்தனைகள் செய்த கண்டக்டர் களை தேர்வு செய்து பரிசு வழங்கப்பட்டு வருகிறது.
விழுப்புரம் தலைமை போக்குவரத்து கழக தலைமை பயிற்சி மையத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு மேலாண் இயக்குநர் குணசேகரன் தலைமை தாங்கி, அதிக பண பரிவர்த்தனைகள் செய்த 12 கண்டக்டர் களை பாராட்டி பரிசு வழங் கினார். தொடர்ந்து, விழுப்புரம் மண்டலத்தை சேர்ந்த இறந்த 13 தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டது.
தொழில்நுட்பம் பொது மேலாளர் ரவீந்திரன், மண்டல பொது மேலாளர் ஜெய்சங்கர் உட்பட அலுவலர்கள், பணியாளர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
மேலும்
-
மருத்துவமனைகளில் 4,000 பணியிடங்கள் சுகாதார சங்கம் வாயிலாக நிரப்ப உத்தரவு
-
தர வரிசை பட்டியலில் திருச்சி விமான நிலையம் முதலிடம்
-
இன்றைய மின் தடை
-
அமைதிக்கான நோபல் பரிசுக்கு அதிபர் டிரம்ப் பெயரை பரிந்துரை செய்தார் இஸ்ரேல் பிரதமர்
-
திருவள்ளூர் புகார் பெட்டி
-
பலத்த பாதுகாப்புடன் இன்று தொடங்கியது கண்டதேவி கோவில் தேரோட்டம்!