பேயை விரட்டுவதாக கூறி அடித்ததில் பெண் பலி
ஷிவமொக்கா : பேயை விரட்டுவதாக கூறி, பெண் மந்திரவாதி ஒருவர், கண்மூடித்தனமாக தாக்கியதில் ஒரு பெண் பலியானார்.
ஷிவமொக்கா மாவட்டம், பத்ராவதி தாலுகாவின் ஜம்பரகட்டா கிராமத்தில் வசித்தவர் கீதா, 35. சில நாட்களாக, இவரது உடல் நிலை பாதிக்கப்பட்டது. சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. அவரது குடும்பத்தினர், ஊரில் இருந்த பெண் மந்திரவாதியிடம் அழைத்துச் சென்றனர்.
அவர், 'கீதாவுக்கு பேய் பிடித்துள்ளது. மாந்த்ரீக பூஜை செய்து விரட்ட வேண்டும்' என்றார். இதற்கு குடும்பத்தினர் சம்மதித்தனர்.
நேற்று முன் தினம் இரவு, ஏதோ பூஜை செய்த மந்திரவாதி, கீதாவை கம்பால் கண்மூடித்தனமாக அடித்தார். ஏற்கனவே உடல் நிலை பாதிக்கப்பட்டு இருந்த அவர், மந்திரவாதியின் அடியை தாங்க முடியாமல் காயமடைந்து மயங்கி விழுந்தார். அவருக்கு சிகிச்சை அளித்தும், பலனின்றி நேற்று காலை உயிரிழந்தார்.
நடந்த சம்பவத்தால் கோபமடைந்த கிராமத்தினர், பெண் மந்திரவாதி குறித்து, பாள ஹொன்னுார் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த போலீசார், கீதாவின் உடலை பரிசோதனைக்கு அனுப்பினர். பெண் மந்திரவாதி மீது, வழக்குப் பதிவு செய்து அவரிடம் விசாரணையை துவக்கி உள்ளனர்.
மேலும்
-
கெம்கா கொலையில் தொடர்புடையவர் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை; பீஹார் போலீஸ் நடவடிக்கை
-
மருத்துவமனைகளில் 4,000 பணியிடங்கள் சுகாதார சங்கம் வாயிலாக நிரப்ப உத்தரவு
-
தர வரிசை பட்டியலில் திருச்சி விமான நிலையம் முதலிடம்
-
இன்றைய மின் தடை
-
அமைதிக்கான நோபல் பரிசுக்கு அதிபர் டிரம்ப் பெயரை பரிந்துரை செய்தார் இஸ்ரேல் பிரதமர்
-
திருவள்ளூர் புகார் பெட்டி