புதிய ஆட்டோவில் பழுது: இழப்பீடு வழங்க உத்தரவு
கோவை; புதிதாக வாங்கிய ஆட்டோவில் அடிக்கடி பழுது ஏற்பட்டதால், இழப்பீடு வழங்க நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது.
கோவை அருகேயுள்ள சின்னத்தடாகம் பகுதியை சேர்ந்தவர் சேகரன்; ஆட்டோ டிரைவரான இவர், அவினாசி ரோட்டிலுள்ள கே.பி.எஸ்., ஆட்டோஸ் ேஷாரூமில், 2020, ஜூலை 17ல், 3.35 லட்சம் ரூபாய்க்கு, 'பியாஜியோ ஆட்டோ' வாங்கினார்.
பயணிகளை ஏற்றி சென்ற போது, அடிக்கடி பழுது ஏற்பட்டு பாதி வழியில் நின்றதால், அவ்வப்போது, சர்வீஸ் சென்டரில் பழுது நீக்கி ஓட்டி வந்தார். ஆனாலும் பழுது சரியாகவில்லை. சவாரியில் கிடைத்த பணம் முழுவதும், பழுது நீக்குவதற்கே சரியாக இருந்தது.
அவருக்கு தொழில் பாதிக்கப்பட்டதால், ஆட்டோ மாற்றி தருமாறு கேட்ட போது மறுத்துவிட்டனர். இழப்பீடு வழங்க கோரி, கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்தார். விசாரித்த ஆணைய தலைவர் தங்கவேல் மற்றும் உறுப்பினர்கள் பிறப்பித்த உத்தரவில், 'எதிர்மனுதாரர் சேவை குறைபாடு செய்துள்ளதால், மனுதாரருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு இழப்பீடாக, 20,000 ரூபாய், வழக்கு செலவு, 5,000 ரூபாய் வழங்க வேண்டும்' என்று தெரிவித்துள்ளனர்.
மேலும்
-
மருத்துவமனைகளில் 4,000 பணியிடங்கள் சுகாதார சங்கம் வாயிலாக நிரப்ப உத்தரவு
-
தர வரிசை பட்டியலில் திருச்சி விமான நிலையம் முதலிடம்
-
இன்றைய மின் தடை
-
அமைதிக்கான நோபல் பரிசுக்கு அதிபர் டிரம்ப் பெயரை பரிந்துரை செய்தார் இஸ்ரேல் பிரதமர்
-
திருவள்ளூர் புகார் பெட்டி
-
பலத்த பாதுகாப்புடன் இன்று தொடங்கியது கண்டதேவி கோவில் தேரோட்டம்!