என்.எஸ்.எஸ்., தொடர்பு அலுவலர்கள் நியமனம் 

கடலுார் : கடலுார் மாவட்ட நாட்டு நலப்பணித் திட்ட தொடர்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ள அரசு பள்ளி ஆசிரியர்கள் இருவருக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் எல்லப்பன் நியமன ஆணை வழங்கினார்.

கடலுார் கல்வி மாவட்டத்திற்கு நாட்டு நலப்பணித் திட்டத்தின் மாவட்ட திட்ட தொடர்பு அலுவலராக குறிஞ்சிப்பாடி, வெங்கடாம்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் சுந்தர்ராஜனும், விருத்தாசலம் கல்வி மாவட்டத்திற்கு திட்ட தொடர்பு அலுவலராக காட்டுமன்னார்கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் பழனியப்பனும் நேர்காணல் முறையில் தேர்வு செய்யப்பட்டனர்.

அவர்கள் இருவருக்கும் நாட்டு நலப்பணித் திட்டத்தின் மாவட்ட திட்ட தொடர்பு அலுவலர் என்ற நியமன ஆணையை மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாாி எல்லப்பன் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

Advertisement