திருவண்டார்கோவில் பகுதியில் ரூ.78 லட்சத்தில் சாலை பணி

திருபுவனை : திருபுவனை தொகுதிக்குட்பட்ட திருவண்டார்கோயில் புது நகர் காலனியில் ரூ. 78 லட்சம் செலவில் உள் வீதிகளில் சாலையை மேம்படுத்தும் பணியை அங்காளன் எம்.எல்.ஏ., நேற்று தொடங்கி வைத்தார்.

புதுச்சேரி ஆதி-திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மற்றும் 'பேட்கோ' சார்பில் திருவண்டார்கோயில் புதுநகர் காலனியில் ரூ. 78 லட்சம் செலவில் உள் வீதிகளில் சாலை மேம்படுத்தும் பணிக்கான பூமி பூஜை நேற்று நடந்தது. விழாவிற்கு திருபுவனை தொகுதி எம்.எல்.ஏ., அங்காளன்., தலைமையேற்று பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்.

விழாவிற்கு ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனர் இளங்கோவன், பேட்கோ செயற்பொறியாளர் பக்தவச்சலம், மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எழில்ராஜன், பேட்கோ இளநிலை பொறியாளர் திருவருட்செல்வன் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் கொம்யூன் பஞ்சாயத்து உதவி பொறியாளர் மல்லிகார்ஜுனன், இளநிலை பொறியாளர் பாஸ்கரன், ஒப்பந்ததாரர் மனோகரன் மற்றும் கிராம பொதுமக்கள் உள்பட பலர் விழாவில் கலந்து கொண்டனர்.

Advertisement