சர்வதேச குமிட்டோ கராத்தே: தமிழக வீரர் ராகுலுக்கு தங்கம்

சென்னை: இந்தோனேஷியாவின், ஜகார்த்தா நகரில், கடந்த 4, 5, 6ம் தேதிகளில் நடந்த, 'குமிட்டோ' வகை கராத்தே போட்டியில், தமிழக வீரர் ராகுல் தங்கம் வென்று அசத்தினார்.

சென்னையை சேர்ந்த ராகுல், 75 கிலோ எடையுள்ள சீனியர் பிரிவில் பங்கேற்றார். முதல் சுற்றில், இந்தோனேஷியா வீரர் முகமது பெரேசியுடன் மோதி, 6 -4 என்ற புள்ளி கணக்கில் வென்றார்; இரண்டாவது சுற்றில், பிலிப்பைன்ஸ் வீரர் ஸ்டீவன் வில்லியமை, 3 - 0 என்ற புள்ளி கணக்கிலும், இறுதி சுற்றில், ஹாங்காங் வீரர் லி மான் ஹேயை, 3 - 2 என்ற புள்ளி கணக்கிலும் வீழ்த்தி தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.

மற்றொரு தமிழக வீரர் விஜயபாஸ்கர், 21 வயது, 67 கிலோ எடைப்பிரிவில், மூன்றாவது சுற்றில் தோல்வியை சந்தித்து, பதக்க வாய்ப்பை இழந்தார்.

Advertisement