புதுச்சேரியில் நாளை பந்த்: 'இண்டியா' கூட்டணி ஆலோசனை

புதுச்சேரி: புதுச்சேரியில் நாளை நடக்கும் பந்த் போராட்டம் குறித்து, 'இண்டியா' கூட்டணியின் ஆலோசனை கூட்டம் நடந்தது.

அகில இந்திய அளவில் தொழிற்சங்கங்கள் சார்பில், நாளை வேலைநிறுத்த போராட்டம் நடக்கிறது. புதுச்சேரியில் இந்த போராட்டத்தை, பந்த் போராட்டமாக நடத்த தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளன. எட்டு இடங்களில் மறியலும் நடக்கிறது.

தொழிற்சங்கங்களின் பந்த் போராட்டம் குறித்த இண்டியா கூட்டணி கட்சியினர் ஆலோசனை கூட்டம், முதலியார்பேட்டை கம்யூ., அலுவலகத்தில் நேற்று நடந்தது.

காங்., புதுச்சேரி மாநில தலைவர் வைத்திலிங்கம், எதிர்க்கட்சி தலைவர் சிவா, இந்திய கம்யூ., மாநில செயலர் சலிம், மா.கம்யூ., மாநில செயலர் ராமச்சந்திரன், வி.சி., முதன்மை செயலர் தேவபொழிலன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

@block_B@

புதுச்சேரியில் ஏன் பந்த் போராட்டம்?

அகில இந்திய அளவில் நாளை வேலைநிறுத்த போராட்டத்திற்கு மட்டுமே மத்திய தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. ஆனால், புதுச்சேரியில் இயல்பு வாழ்க்கை முடங்கும் வகையில் பந்த் போராட்டம் நடக்கிறது. இது தொடர்பாக காங்., தலைவர் வைத்திலிங்கத்திடம் கேள்வி எழுப்பியபோது, “மத்தியில் பா.ஜ., ஆளுகிறது. புதுச்சேரியிலும் அதன் நிழல் ஆட்சி தான் நடக்கிறது. ஆனால், தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச கூலி வழங்குவது குறித்து, தொழிற்சங்கங்களை அழைத்து பேசவில்லை. இதன் காரணமாகவே, புதுச்சேரியில் பந்த் போராட்டம் நடக்கிறது. இதில் ஆட்டோ, டெம்போ, பஸ், தொழிற்சாலைகள், வியாபாரிகள், தனியார் பள்ளி, கல்வி நிறுவனங்கள் தாமாக முன்வந்து பங்கேற்க உள்ளன,” என்றார். block_B

Advertisement