சுற்றுச்சூழலை வலியுறுத்தி சைக்கிள் பயணம்

காரைக்குடி: மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இளைஞர் பிரசான்ஜித் தாஸ் 26. பி.ஏ., பட்டதாரியான இவர் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மரம் நடுதல், ரத்த தானம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்திட சைக்கிள் விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டுள்ளார்.

ஜன.4ம் தேதி மேற்கு வங்கத்திலிருந்து பயணத்தை தொடங்கி காரைக்குடி வந்தடைந்தார்.

மேற்குவங்க இளைஞர் கூறுகையில், புவி வெப்பமடைதலை தடுத்துமரங்கள் நடுவதை வலியுறுத்தியும், ரத்ததானத்தின் அவசியத்தை விளக்கிடவும்இந்தப் பயணத்தை தொடங்கியுள்ளது.

ஜன.4ம் தேதி பயணத்தை தொடங்கினேன். 170 நாட்களுக்கு மேலாகிவிட்டது. மேற்குவங்கம், ஜார்கண்ட், ஒடிசா, ஆந்திரா,தமிழ்நாடு, நாகப்பட்டினம் செல்கிறேன். அங்கிருந்து இலங்கை சென்று மீண்டும் நாகப்பட்டினம் வந்து ஊர் திரும்புகிறேன் என்றார்.

Advertisement