இந்தியா - பாக்., போரை நிறுத்தியதாக 21 முறை சொன்ன டிரம்ப்: மத்திய அரசுக்கு காங்., கேள்வி

புதுடில்லி: கடந்த 59 நாட்களில் 21 முறை இந்தியா - பாகிஸ்தான் சண்டையை நிறுத்தியது தாம் தான் என்று டிரம்ப் கூறியது பற்றி காங்கிரஸ் கேள்வி எழுப்பியது.
பஹல்காம் சம்பவத்திற்கு அதிரடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத நிலைகள் மீது ஆபரேஷன் சிந்தூர் என்னும் பெயரிலான நடவடிக்கை மூலம் இந்தியா பதிலடி கொடுத்தது. பின்னர் இருநாடுகளும் தாக்குதலை நிறுத்துவதாக பரஸ்பரம் அறிவித்தது.
ஆனால், இருநாடுகள் இடையேயான இந்த மோதலை தான் தாம் நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்து இருந்தார். அவரின் இந்த அறிவிப்புக்கு காங்கிரஸ் அவ்வப்போது கேள்விகளை எழுப்பி வந்தது. காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தமது சமூக வலைதள பக்கத்தில் வீடியோவுடன் கூடிய பதிவை ஒன்றை வெளியிட்டு கேள்வி எழுப்பி உள்ளார். அந்த பதிவில் இந்தியா, பாக். போரை நான் தான் நிறுத்தினேன் என்று டிரம்ப் பேசும் வீடியோவையும் இணைத்துள்ளார்.
அவர் மேலும் கூறி உள்ளதாவது;
கடந்த 59 நாட்களில் குறைந்தபட்சம் 21 முறையாவது இந்தியா பாகிஸ்தான் போரை நான் தான் நிறுத்தினேன். அது அணு ஆயுத மோதலாக மாற இருந்தது என்று டிரம்ப் கூறி இருக்கிறார். போரை நிறுத்தாவிட்டால் முதலீடுகளை இழக்க வேண்டி வரும் என்று அவர் கூறி உள்ளார்.
இந்தியா மற்றும் பாகிஸ்தானுடனான அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் மிக விரைவில் அறிவிக்கப்பட உள்ளது என்று அறிவித்தது போலவே, டிரம்ப் இதையெல்லாம் குறிப்பிட்டு உள்ளார். தொடர்ந்து அவர் சொல்லிக் கொண்டே இருக்கிறார். இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி ஏன் இன்னமும் மவுனமாக இருக்கிறார் என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.
மேலும்
-
திருச்சி விமான நிலையத்தில் 11.8 கிலோ உயர்ரக கஞ்சா பறிமுதல்; இதன் மதிப்பு ரூ.11.8 கோடி!
-
பீஹாரில் அரசு வேலைவாய்ப்புகளில் பெண்களுக்கு 35 % இட ஒதுக்கீடு; முதல்வர் நிதிஷ் அறிவிப்பு
-
இந்தூர்- ராய்ப்பூர் இண்டிகோ விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு; அவசர தரையிறக்கம்!
-
பழம்பெரும் தெலுங்கு சினிமா பாடலாசிரியர் சிவசக்தி தத்தா மறைவு: சிரஞ்சீவி உள்ளிட்டோர் இரங்கல்
-
சுற்றுச்சூழலை வலியுறுத்தி சைக்கிள் பயணம்
-
மின்சார பஸ்களுக்கான சார்ஜ் ஏற்றும்போது திடீரென பேட்டரி வெடித்து 2 பேர் காயம்