ஒருமையில் பேசுகிறார்: நிதித்துறை சிறப்பு செயலரை கண்டித்து தலைமை செயலக ஊழியர்கள் போராட்டம்

7


சென்னை: நிதித்துறை சிறப்பு செயலர், ஒருமையில் பேசுவதாக கூறி, தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் நிதித்துறை ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


நிதித்துறை சிறப்பு செயலராக இருப்பவர் அருண் சுந்தர் தயாள். இவர், தங்களை ஒருமையில் பேசுவதாக ஊழியர்கள் குற்றம்சாட்டி வந்தனர். இந்நிலையில், இன்று கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள், 400க்கும் மேற்பட்டோர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும், அவருக்கு எதிராக நிதித்துறை செயலாளரிடமும் புகார் தெரிவித்துள்ளனர்.

Advertisement