இத்தாலி விமான நிலையத்தில் பரபரப்பு; விமான இன்ஜினுக்குள் சிக்கி ஒருவர் உயிரிழப்பு; விமான சேவைகள் ரத்து

ரோம்: இத்தாலியின் மிலன் பெர்கமோ விமான நிலையத்தில், விமானத்தின் இன்ஜினுக்குள் சிக்கி, 35 வயதுடைய நபர் உயிரிழந்தார். இதன் காரணமாக விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இத்தாலியின் மிலன் பெர்கமோ விமான நிலையத்தில் இன்று வோலோடியா நிறுவனத்தின் ஏர்பஸ் ஏ319 என்ற விமானம் ஸ்பெயினின் அஸ்டூரியாஸுக்கு செல்ல ஓடுதளத்தில் தயாராக இருந்தது. அப்போது, விமானம் அருகே ஓடிக்கொண்டிருந்த நபர் விமானத்தின் இன்ஜினுக்குள் உள்ளிழுக்கப்பட்டார்.
இதையடுத்து அந்த நபர் பரிதாபமாக உயிரிழந்தார். அந்த நபர் 35 வயது உடையவர் என்பது விசாரணையில் தெரியவந்தது. விமானத்தின் இன்ஜினால் உள்ளிழுக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த சம்பவத்துக்குப் பின்னர், உயிரிழந்தது பயணியோ விமான ஊழியரோ அல்ல. 154 பயணிகளும் 6 பணியாளர்களும் விமானத்தில் பாதுகாப்பாக இருக்கின்றனர் என
வோலோடியா விமான நிறுவனம் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளது.
விமான சேவை பாதிப்பு
இந்த விபத்து காரணமாக ஏராளமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. சில விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்குத் திருப்பி விடப்பட்டன.
@block_G@
காலை 10:20 முதல் அங்கு விமான சேவைகள் நிறுத்தப்பட்டு, மதியத்துக்கு மேல் விமானங்கள் இயக்கப்பட்டன. இந்த விபத்து எப்படி நிகழ்ந்தது என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.block_G

