தனியார் பஸ்கள் கேரளாவில் வேலை நிறுத்தம்

திருவனந்தபுரம் : கேரளாவில் தனியார் பஸ்கள் அதிக அளவில் இயங்குகின்றன. இந்நிலையில், 'காலாவதியான பெர்மிட்களை தாமதமின்றி புதுப்பிக்க வேண்டும், சாதாரண பஸ்களை போல் அனைத்து நிறுத்தங்களிலும் பஸ் நின்று செல்லும் உத்தரவை திரும்பப் பெற வேண்டும்.

மாணவர்களுக்கான கட்டணச் சலுகை விகிதங்களை திருத்த வேண்டும்' என்பது உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை, தனியார் பஸ் உரிமையாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

சமீபத்தில், தனியார் பேருந்து உரிமையாளர்களின் கூட்டுக்குழு பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அரசுடன் பேச்சு நடத்தியது. உடன்பாடு எட்டப்படாததால், மாநிலம் தழுவிய அடையாள வேலைநிறுத்தம் நேற்று நடந்தது.

இதனால் பயணியர் பாதிக்கப்பட்ட நிலையில், அரசு பஸ்கள் கூடுதலாக இயக்கப்பட்டன. தங்கள் கோரிக்கைகள் குறித்து பரிசீலிக்காவிட்டால், ஜூலை 22 முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என, பஸ் உரிமையாளர்கள் எச்சரித்துள்ளனர்.

Advertisement