நடுவானில் இண்டிகோ விமானத்தில் மோதிய பறவை: பாட்னாவில் அவசர தரையிறக்கம்

3

பாட்னா: பாட்னாவில் இருந்து 169 பணிகளுடன் டில்லிக்கு புறப்பட்ட இண்டிகோ விமானத்தின் மீது நடுவானில் பறவை மோதியது. இதையடுத்து, பாட்னாவுக்கு திருப்பி விடப்பட்ட விமானம், அவசரமாக தரையிறக்கப்பட்டது.


பீஹார் மாநிலம், பாட்னாவில் இருந்து 175 பயணிகள் உடன் டில்லிக்கு இண்டிகோ விமானம் புறப்பட்டது. நடுவானில் சென்று கொண்டிருந்த நிலையில், விமானத்தின் மீது பறவை மோதியது. இதையடுத்து விமானத்தை பாட்னாவில் விமானி பத்திரமாக தரையிறக்கினார்.


விமானத்தில் ஏற்பட்டுள்ள சேதத்தை சரிசெய்ய முயற்சிகள் நடந்து வருகின்றன.
இந்த சம்பவம் காலை 8:42 மணிக்கு நிகழ்ந்தது. 'இன்ஜினில் ஏற்பட்ட அதிர்வு காரணமாக விமானம் பாட்னாவில் தரையிறக்கப்பட்டது. அனைத்து பயணிகளும் பாதுகாப்பாக உள்ளனர்" என பாட்னா விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.



உரிய நேரத்தில் டில்லி செல்ல முடியாமல் அவதிக்கு ஆளான பயணிகள் அனைவரும் ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்யும் பணி நடந்து வருகிறது என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Advertisement