அரசியல் பரபரப்புக்கு இடையே டென்னிஸ் விளையாடிய முதல்வர்

புதுச்சேரி: அரசியல் பரபரப்புக்கு இடையே முதல்வர் ரங்கசாமி வழக்கம் போல் டென்னிஸ் விளையாடினார்.
கவர்னருடனான மோதலை தொடர்ந்து, முதல்வரின் ராஜினாமா அறிவிப்பு புதுச்சேரி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முதல்வரை சமாதானப்படுத்த பா.ஜ., - அ.தி.மு.க., என்.ஆர்., காங்., முக்கிய பிரமுகர்கள் மட்டுமின்றி முதல்வருக்கு நெருக்கமானவர்கள் உள்பட சட்டசபை துவங்கி முதல்வர் வீடு வரை சென்று முதல்வரை சந்தித்து பேசிவிட்டு சென்றனர். இதனால் புதுச்சேரியில் துவங்கி டில்லி பா.ஜ., தலைமை வரை அரசியல் பரபரப்பு தொற்றிக் கொண்டது.
இந்நிலையில், எவ்வித டென்ஷனும் இல்லாமல் முதல்வர் ரங்கசாமி நேற்று மாலை 6:15 மணியளவில் துவங்கி வழக்கம் போல் தனது வீட்டில் உள்ள கிரவுண்டில் 45 நிமிடம் டென்னிஸ் விளையாடினார். 7:15 மணியளவில் அங்கு வந்த டில்லி மேலிடப் பிரதிநிதி மல்லாடி கிருஷ்ணராவ் சந்தித்து பேசினார். அவரைத் தொடர்ந்து அமைச்சர் திருமுருகன் மாங்கனி திருவிழாவில் முதல்வர் பங்கேற்க வருமாறு அழைப்பு விடுத்து சென்றார்.
முன்னதாக அ.தி.மு.க., மாநில செயலாளர் அன்பழகனும், முதல்வரை சந்தித்து 2 மணி நேரத்திற்கு மேலாக ஆலோசனை நடத்தினார்.
அதனையடுத்து திருமணம் உள்ளிட்ட வரவேற்பு நிகழ்ச்சிகளுக்கு முதல்வர் புறப்பட்டு சென்றார்.
போலீஸ் பாதுகாப்பு
முதல்வர் ரங்கசாமி வீட்டில் வழக்கமாக போலீஸ் கெடுபிடி இருக்காது. ஆனால், நேற்று முதல்வரை சமாதானப்படுத்த பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் அடுத்தடுத்து அவரது வீட்டிற்கு வருகை தந்தனர். இதனால், ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.
மேலும், முக்கியஸ்தர்கள் மட்டும் முதல்வரை சந்திக்கும் வகையில், வீட்டு மாடிப்படிக்கட்டில் ஐ.ஆர்.பி.என்., போலீசார் பாதுகாப்பு பணியில் நிறுத்தப்பட்டிருந்தனர்.
மேலும்
-
நான்கு வழி சாலையில் 2 லாரிகள் மோதி விபத்து; 3 பேர் உயிரிழப்பு
-
ம.தி.மு.க., கூட்டத்தில் ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல்; அண்ணாமலை கடும் கண்டனம்
-
நியூ காலனி சந்திப்பில் சாலை ஆக்கிரமிப்பு
-
அடையாறு கால்வாய் குறுக்கே சர்வீஸ் சாலை அமைக்கப்படுமா?
-
ஒரே வாரத்தில் உடைந்த 'மேன்ஹோல்' மூடி
-
நடைபாதை ஆக்கிரமிப்பு பாதசாரிகளுக்கு சிரமம்