நிர்க்கதியான நீரூற்றுக்கள்... பராமரிப்பின்றி பாழ்

திண்டுக்கல் மாவட்டத்தில் முக்கிய அரசு அலுவலகங்கள், பூங்காக்கள்,முக்கிய சந்திப்பில் அலங்கார நீரூற்றுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இதற்காக ரூ.பல லட்சங்கள் செலவிடப்பட்டுள்ளன. தற்போது முறையான பராமரிப்பு இல்லாமல் பாழாகி வருகின்றன. முறையாக செயல்பட்ட போது இதன் அழகை காண்போர் மனது இலகுவாகியது. இப்படி மனதை கவர்ந்திழுந்த நீரூற்றுக்கள் இன்று பாழாகி கிடக்க பார்ப்போர் மனதை வேதனையடைய செய்கிறது. இதுபோன்ற நீரூற்றுக்களை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் முயற்சிக்க வேண்டும்.

Advertisement