ஒரு மணி நேரம் ஸ்டிரைக்

வேடசந்துார்: வேடசந்துார் அரசு போக்குவரத்து பணிமனையில் உள்ள 33 பஸ்களும் காலை முதல் செயல்பட்டது. மதியம் ஒரு மணிக்கு பணி மாற்றம் என்பதால் ஊழியர்கள் அலுவலகம் சென்று கையெழுத்திட்டு பஸ்களுடன் பஸ் ஸ்டாண்ட் வந்தனர். பஸ் முன் பகுதியில் வேடசந்துார் என போர்டு இருந்ததால் பயணிகள் எந்த பஸ் எந்த ஊருக்கு செல்கிறது என தெரியாமல் தவித்தனர். ஒரு மணி நேரம் நடந்த இந்த நுாதன போராட்டம் குறித்து போக்குவரத்து மேலாளருக்கு தெரிய வர ஓட்டுனர் , நடத்துநனர்களை எச்சரித்தார். அதன்பிறகு அனைத்து பஸ்களும் சென்றன.

போக்குவரத்து கழக மேலாளர் ஜெயகாந்தன் கூறுகையில்,'' வேலை நிறுத்தம் என்பதால் பலர் வேலைக்கு வரவில்லை. கூடுதல் பணி பார்க்கும் ஓட்டுநர், நடத்துநர்கள் மதியம் சாப்பிட கூடுதல் நேரம் எடுத்து கொண்டதால் தாமதம் ஆகிவிட்டது'' என்றார்.

Advertisement