திண்ணை பிரசாரம் மூலம் எடுத்து சொல்லுங்க: அமைச்சர் சக்கரபாணி
ஒட்டன்சத்திரம்: ''தமிழக அரசின் சாதனை திட்டங்களை திண்ணைப் பிரசாரம் மூலம் பொதுமக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும்'' என அரசு சக்கரபாணி பேசினார்.
ஒட்டன்சத்திரத்தில் தி.மு.க., உறுப்பினர் சேர்க்கை குறித்த ஆய்வு கூட்டத்தில் அவர் பேசியதாவது:
ஓரணியில் தமிழ்நாடு தி.மு.க., உறுப்பினர் சேர்க்கையை தீவிர படுத்த வேண்டும்.
2026 சட்டசபை தேர்தலில் தி.மு.க., அமோக வெற்றி பெற்று மீண்டும் ஸ்டாலினை முதல்வராக்க அனைவரும் ஒற்றுமையுடன் பணியாற்ற வேண்டும். தமிழக அரசின் சாதனை திட்டங்களை திண்ணை பிரசாரம் மூலம் பொதுமக்களிடம் எடுத்து செல்ல வேண்டும் என்றார்.
மாவட்ட அவைத்தலைவர் மோகன், துணைச் செயலாளர் ராஜாமணி ,நகரச் செயலாளர் வெள்ளைச்சாமி, ஒன்றிய செயலாளர்கள் தர்மராஜன், எஸ்.ஆர். கே.பாலு, சுப்பிரமணியன், பொன்ராஜ், தங்கம், பேரூர் செயலாளர் அன்பு காதர் பாட்ஷா, செயற்குழு உறுப்பினர் கண்ணன், பொது குழு உறுப்பினர்கள் வெங்கடசாமி, செல்வராஜ், தொழில் நுட்ப அணி தினேஷ் கலந்து கொண்டனர்.
மேலும்
-
மனைவியை கொலை செய்த விவசாயிக்கு ஆயுள்
-
சூதாட்ட செயலிகளுக்கு விளம்பரம்: நடிகர் பிரகாஷ் ராஜ் உட்பட 29 பேர் மீது அமலாக்கத்துறை வழக்கு
-
1998ம் ஆண்டு கோவை தொடர் குண்டு வெடிப்பு; முக்கிய குற்றவாளி 28 ஆண்டுக்கு பிறகு கைது
-
ஆன்லைன் மோசடி; 71 பேர் கைது
-
நேர்மை கட்டணம்: அமெரிக்க விசா செலவு உயரும்
-
கோல்டன் விசாவில் சலுகையா; மறுக்கிறது யு.ஏ.இ., அரசு