மக்கள் தொடர்பு முகாம்

தேனி: தேனி தாலுகாவிற்கு உட்பட்ட ஜங்கால்பட்டியில் டி.ஆர்.ஓ., மகாலட்சுமி தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நடந்தது.

பெரியகுளம் சப் கலெக்டர் ரஜத்பீடன் முன்னிலை வகித்தார். முகாமில் பல்வேறு துறைகள் சார்பில் 58 பயனாளிகளுக்கு ரூ. 64.16 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கினர். சமூக பாதுகாப்பு திட்ட மாவட்ட அலுவலர் சாந்தி, தாசில்தார் சதீஷ்குமார் உள்ளிட்டோர் முகாமில் பங்கேற்றனர்.

Advertisement