செயற்குழு கூட்டம்

தேனி: அல்லிநகரம் தனியார் மண்டபத்தில், தேசிய விவசாயிகள் விழிப்புணர்வு இயக்கத்தின் சார்பில் மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது.

மாவட்டத் தலைவர் தங்கராஜ், மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் நடராஜ்குமார், தேனி வட்டார தலைவர் ராஜகுரு, செயலாளர் சேகர், மாவட்ட கவுரவ தலைவர் பார்த்தீபன், தேனிநிர்வாகி செல்வராஜ், பொருளாளர் அசோக், பெரியகுளம் வட்டாரத் தலைவர் முத்துப்பாண்டி உள்ளிட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர். மாநில மாநாடு நடத்தப்படும் நகரத்திற்கு தேனி மாவட்டத்தில் இருந்து அதிக விவசாயிகள் பங்கேற்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement