மேல்சபை துணை செயலர் 'சஸ்பெண்ட்' இடைக்கால தடை விதித்த ஐகோர்ட்
பெங்களூரு: அரசியலமைப்பு தினத்தன்று, அம்பேத்கர் படத்தை வைக்கவில்லை என்று கூறி கர்நாடக மேல்சபை துணை செயலர் ஜலஜாக் ஷி 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டதற்கு, கர்நாடக உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
கர்நாடக மேல்சபை துணை செயலராக இருப்பவர் ஜலஜாக் ஷி. பெங்களூரு விதான் சவுதாவில் கடந்தாண்டு நவம்பர் 26ம் தேதி 'அரசியலமைப்பு நாள்' நிகழ்ச்சி நடந்தது. அப்போது, அரசியலமைப்பை உருவாக்கிய அம்பேத்கரின் படம் வைக்கப்படவில்லை.
இதுதொடர்பான புகார், மேல்சபை தலைவர் பசவராஜ் ஹொரட்டியின் கவனத்துக்கு சென்றது. அவர், 'வரும் நாட்களில் இதுபோன்ற சம்பவம் நடக்கக் கூடாது' என, ஜலஜாக் ஷியை எச்சரித்து அனுப்பினார்.
இச்சம்பவம் நடந்து எட்டு மாதங்களுக்கு பின், ஜலஜாக் ஷியை பணியிடை நீக்கம் செய்து, மேல்சபை செயலர் ஜூலை 4ல் உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை எதிர்த்து, கர்நாடக உயர் நீதிமன்றத்தில், துணை செயலர் ஜலஜாக் ஷி மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இம்மனு, நீதிபதி நாகேந்திர பிரசாத் முன்னிலையில் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பு வக்கீல் ராகவேந்தரா வாதிட்டதாவது:
அரசியலமைப்பின் முகவுரையை படிப்பதற்காக வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில், அம்பேத்கரின் புகைப்படம் வைப்பது பற்றி குறிப்பிட்டு கூறப்படவில்லை.
பணியில் அஜாக்கிரதையாக இருந்ததாக அளித்த நோட்டீசுக்கு, மனுதாரர் ஜலஜாக் ஷி, 'இந்நிகழ்ச்சியை தான் நடத்தவில்லை; இதற்கு தான் பொறுப்பாளி அல்ல' என்று விரிவாக பதிலளித்துள்ளார்.
மேல்சபை தலைவரும், 'எதிர்காலத்தில் இத்தகைய சம்பவம் நடக்கக் கூடாது' என, ஜலஜாக் ஷியை எச்சரித்து அனுப்பினார்.
ஆனாலும், சில அமைப்பினர், ஜூலை 3ம் தேதி அளித்த புகாரின் அடிப்படையில், மனுதாரர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
அடுத்தாண்டு அவருக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. அதை தடுக்கவே இப்புகார் அளிக்கப்பட்டுள்ளது. எனவே, சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் வாதிட்டார்.
நீதிபதி நாகேந்திர பிரசாத் கூறுகையில், ''மனுதாரருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட சஸ்பெண்ட் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது.
''அதேவேளையில், அவர் மீது துறை ரீதியில் விசாரணை நடத்த எந்த தடையும் இல்லை. அடுத்த விசாரணைக்கு வரும் வரை, மனுதாரர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது. மனுதாரரின் மனுவுக்கு, பதிலளிக்கும்படி மேல்சபை தலைவர், செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும்,'' என்றார்.
மேலும்
-
நான்கு வழி சாலையில் 2 லாரிகள் மோதி விபத்து; 3 பேர் உயிரிழப்பு
-
ம.தி.மு.க., கூட்டத்தில் ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல்; அண்ணாமலை கடும் கண்டனம்
-
நியூ காலனி சந்திப்பில் சாலை ஆக்கிரமிப்பு
-
அடையாறு கால்வாய் குறுக்கே சர்வீஸ் சாலை அமைக்கப்படுமா?
-
ஒரே வாரத்தில் உடைந்த 'மேன்ஹோல்' மூடி
-
நடைபாதை ஆக்கிரமிப்பு பாதசாரிகளுக்கு சிரமம்