மடாதிபதிகள் அரசியல் பேசக்கூடாது!

காங்கிரசுக்கும், ரம்பாபுரி மடாதிபதிக்கும் என்ன சம்பந்தம்? முதல்வர் மாற்றம் என்பது, எங்கள் கட்சி சார்ந்த விஷயமாகும். இது ரம்பாபுரி மடாதிபதிக்கு சம்பந்தம் இல்லாத விஷயமாகும். அவரது பணி வேறு, எங்களின் பணி வேறு.

நல்ல சமுதாயத்தை உருவாக்குவது, மக்களுக்கு ஆசி கூறுவது சுவாமிகளின் பணியாகும். அரசியல் குறித்து அவர்கள் பேசக்கூடாது. அது அவர்கள் சம்பந்தப்பட்ட விஷயம் அல்ல.

வாக்குறுதித் திட்டங்களால், மக்கள் சோம்பேறிகள் ஆகின்றனர் என, ரம்பாபுரி சுவாமிகள் கூறுகிறார். இதற்கான பதிலை மக்கள்தான் கூற வேண்டும். இதை பற்றி 1,000 பேரிடம் கேட்டால், பதில் கிடைக்கும்.

- சதீஷ் ஜார்கிஹோளி

பொதுப்பணி துறை அமைச்சர்

***

Advertisement