தலைமை செயலர் பற்றி அவதுாறு பா.ஜ., ரவிகுமாருக்கு முன்ஜாமின்

பெங்களூரு: தலைமை செயலர் ஷாலினியை பற்றி ஆட்சேபனை கருத்துத் தெரிவித்த வழக்கில், பா.ஜ., மேல்சபை கொறடா ரவிகுமாருக்கு முன்ஜாமின் கிடைத்துள்ளது.
கர்நாடக அரசின் தலைமை செயலர் ஷாலினி குறித்து, பா.ஜ., மேல்சபை கொறடா ரவிகுமார் அவதுாறு கருத்துத் தெரிவித்தார். இதுகுறித்து நந்ததீபா மகளிர் அறக்கட்டளை தலைவி நாகரத்னா அளித்த புகாரில், ரவிகுமார் மீது விதான் சவுதா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
வழக்கை ரத்து செய்ய கோரி ரவிகுமார் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், மனுதாரர் மீது கட்டாய நடவடிக்கை எடுக்க தடை விதித்து இருந்தது. இதற்கிடையில் முன்ஜாமின் கேட்டு மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றத்திலும் ரவிகுமார் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
மனுவை, நீதிபதி சந்தோஷ் கஜானன் பட் விசாரித்து, ரவிகுமாருக்கு முன்ஜாமின் வழங்கி நேற்று உத்தரவிட்டார். பிணைய தொகையாக ஒரு லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும்; விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும்; ஆதாரங்களை அழிக்க முயற்சி செய்ய கூடாது என்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
மேலும்
-
நான்கு வழி சாலையில் 2 லாரிகள் மோதி விபத்து; 3 பேர் உயிரிழப்பு
-
ம.தி.மு.க., கூட்டத்தில் ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல்; அண்ணாமலை கடும் கண்டனம்
-
நியூ காலனி சந்திப்பில் சாலை ஆக்கிரமிப்பு
-
அடையாறு கால்வாய் குறுக்கே சர்வீஸ் சாலை அமைக்கப்படுமா?
-
ஒரே வாரத்தில் உடைந்த 'மேன்ஹோல்' மூடி
-
நடைபாதை ஆக்கிரமிப்பு பாதசாரிகளுக்கு சிரமம்