இன்று குரு பவுர்ணமி கொண்டாட்டம் வேதம் படிக்கும் மாணவர்கள் கவுரவிப்பு
தொம்மலுார்: குரு பவுர்ணமியை ஒட்டி, இன்று வேத பாடசாலையில் படிக்கும் மாணவர்களும், விபூதிபுரா வீரசிம்மாசன சமஸ்தானத்தில் படிக்கும் மாணவர்களும் கவுரவிக்கப்படுகின்றனர்.
ஸ்ரீவித்யா தொண்டு அறக்கட்டளையின் 44ம் ஆண்டு விழா, வேத அறிஞர்கள் கவுரவிப்பு மஹோத்சவம், ஸ்ரீசாதுராம் சுவாமிகளின் 25ம் ஆண்டு ஆராதனை இரண்டாம் பாகம் விழா, நேற்று நடந்தது.
காலையில், உலக நன்மைக்காக மஹா மிருஞ்செய ஹோமம் நடத்தப்பட்டது.
அதை தொடர்ந்து 260 வேத அறிஞர்கள் கவுரவிக்கப்பட்டனர். மாலையில் பெண்கள் லலிதா சஹஸ்ரநாம பாராயணம் செய்தனர்.
அதை தொடர்ந்து இரவில் நடந்த ஸ்ரீதுஷ்யந்த் ஸ்ரீதர், உபன்யாசம் நிகழ்த்தினார்.
இதில், நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து, உபன்யாசத்தை கேட்டு மகிழ்ந்தனர்.
குரு பவுர்ணமியான இன்று அறக்கட்டளை சார்பில் நகரின் பல்வேறு பகுதியில் உள்ள வேத பாடசாலையை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் வரவழைக்கப்பட்டு, கவுரவிக்கப்படுகின்றனர்.
அதுபோன்று, விபூதிபுராவில் உள்ள வீர சிம்மாசன சமஸ்தானம் மடத்தில் வேதம் படிக்கும் 225 மாணவர்கள், பஸ்சில் அழைத்து வரப்பட்டு கவுரவிக்கப்படுகின்றனர். அன்னதானம் வழங்கப்படுகிறது.
மேலும்
-
சூதாட்ட செயலிகளுக்கு விளம்பரம்: நடிகர் பிரகாஷ் ராஜ் உட்பட 29 பேர் மீது அமலாக்கத்துறை வழக்கு
-
1998ம் ஆண்டு கோவை தொடர் குண்டு வெடிப்பு; முக்கிய குற்றவாளி 28 ஆண்டுக்கு பிறகு கைது
-
ஆன்லைன் மோசடி; 71 பேர் கைது
-
நேர்மை கட்டணம்: அமெரிக்க விசா செலவு உயரும்
-
கோல்டன் விசாவில் சலுகையா; மறுக்கிறது யு.ஏ.இ., அரசு
-
இந்தியாவின் கழுத்தில் சீன கத்தி