அ.தி.மு.க., பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்; இ.பி.எஸ்., பேட்டி

16


சென்னை: ''வரும் சட்டசபை தேர்தலில், பெரும்பான்மை உடன் அ.தி.மு.க., வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்'' என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., தெரிவித்துள்ளார்.

'தமிழகத்தில் நிச்சயம் தே.ஜ, கூட்டணி வெற்றி பெறும். கூட்டணி ஆட்சியில் பா.ஜ., பங்கேற்கும்,'' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேட்டி அளித்து இருந்தார்.

தமிழகத்தில் அ.தி.மு.க., தனித்து ஆட்சி அமைக்கும் என இ.பி.எஸ்., கூறி வரும் நிலையில், பேசும் பொருளானது.

இந்நிலையில், சென்னையில் இன்று (ஜூலை 12) அமித்ஷா கூட்டணி ஆட்சி அமைக்கும் என கூறியுள்ளாரே என நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு, ''ஏங்க, நான் தான் தெளிவாக சொல்லிவிட்டேன். பெரும்பான்மை உடன் அ.தி.மு.க., வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். நன்றி வணக்கம்'' என இ.பி.எஸ்., பதில் அளித்தார்.

Advertisement