2026ல் தி.மு.க., கூட்டணி வீட்டிற்கு அனுப்பப்படும்: நயினார் நாகேந்திரன்

மதுரை: ''2026ல் தி.மு.க., கூட்டணி வீட்டிற்கு அனுப்பப்படும்'' என தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
மதுரை மாநகராட்சியில் ஏற்பட்ட முறைகேடுகளை கண்டித்து, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் புதூர் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது நயினார் நாகேந்திரன் பேசியதாவது: அமித்ஷா என்றைக்கு மதுரைக்கு வந்து மீண்டும் ஒரு கூட்டணியையும், மதுரையில் மிகப்பெரிய கூட்டத்தை மாநாடு போல நடத்திவிட்டு சென்று விட்டாரோ, அன்றையில் இருந்து அமித்ஷா டில்லியில் இருந்து தமிழகத்திற்கு பிளேட் ஏறிவிட்டார் என்று சொன்னால், தி.மு.க.,வினருக்கு ஒரு நடுக்கம் இருக்கிறது.
இன்றைக்கு கூட பத்திரிகையில் செய்தி வந்து இருக்கிறது. அமித்ஷா பேசி இருக்கிறார். தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றம் வரப்போகிறது. ஆட்சி மாற்றம் வர போகிறது. அந்த மாற்றத்திற்கு காரணமாக இருக்கிற, தமிழக மக்களுக்கு நன்றி, வணக்கத்தையும் தெரிவித்து கொள்கிறேன் என்று அமித்ஷா பேசி இருக்கிறார். ஓரணியில் தமிழ்நாடு என்று முதல்வர் ஸ்டாலின் பிரசாரம் செய்கிறார். தமிழக முதல்வருக்கு வேறு வேலை இல்லை.
எனது பாராட்டுக்கள்
ஓரணியில் காவல் நிலையத்தில் லாக்கப் டெத், ஓரணியில் கள்ளச்சாராயம் விற்றுக் கொண்டிருக்கிறார்கள். கள்ளச்சாரயம் குடித்து செத்து போனால் ரூ.10 லட்சம். விபத்தில் உயிரிழந்தால் ரூ.3 லட்சம். சட்டம் ஒழுங்கு சரியில்லை. தவறுகள் குறித்து முத்தரசன் கேட்கிறார்கள். கூட்டணியில் இருந்து கொண்டு தவறு நடக்கும்போது தட்டி கேட்கிறார் என்றால் அது ஒரு நல்ல விஷயமாக தடுக்கும் அவருக்கு எனது பாராட்டுக்கள்.
காங்கிரஸ் என்கின்ற ஒரு கட்சி தமிழகத்தில் இருக்கின்றதா, இல்லையா என்று யாருக்குமே தெரியவில்லை. எந்த விஷயத்தையும் அவர்கள் கையில் எடுப்பது இல்லை. காவல் நிலையம் மட்டுமல்ல, கள்ளச்சாராயமாக இருந்தாலும் கூட எந்த பிரச்னையையும் அவர்கள் கையில் எடுக்கவில்லை. கேட்டால், அவர்கள் கூட்டணியில் இருப்பதால் ஏதும் கேட்பதில்லை. 2026ல் தி.மு.க., கூட்டணி வீட்டிற்கு அனுப்பப்படும்.
22 வருடம்....!
மதுரை எப்போதுமே பா.ஜ.,வினருக்கு ராசியான நகரம், மதுரையில் தான் அமித்ஷா தலைமையில் மாநாடு நடைபெற்றது. அதேபோன்று முருக பக்தர்கள் மாநாடும் நடைபெற்றது. மதுரை தி.மு.க.,விற்கு ராசி இல்லாத ஒரு இடம், இதற்கு முன்னர் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்திற்கு பின், 22 வருடம் அவர்கள் ஆட்சிக்கு வரவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.








மேலும்
-
ஆளுங்கட்சியுடன் எதிர்க்கட்சியும் ஊழலில் திளைக்கும் கேரளா: அமித் ஷா சாடல்
-
காலத்தைக் கடந்து நிற்கும் காவல் அரண்மனை-செஞ்சி கோட்டை.
-
ஜூலை 14ல் பூமி திரும்பியதும் 7 நாட்கள் சுக்லா மருத்துவ கண்காணிப்பில் இருப்பார்; ஏற்பாடுகள் தீவிரம்
-
திருமலா பால் நிறுவன அதிகாரியை போலீசார் மிரட்டவில்லை: சென்னை போலீஸ் கமிஷனர்
-
சென்னை-சிங்கப்பூர் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு; பயணிகள் 217 பேர் கடும் அவதி
-
விமான விபத்து அறிக்கையில் வெளிப்படைத்தன்மை இல்லை: இந்திய விமானிகள் சங்கம் நிராகரிப்பு