எதிர்க்கட்சிகள் அமைத்துள்ள கூட்டு என்பது கூட்டணியல்ல; சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்

சென்னை: ''அ.தி.மு.க., பா.ஜ., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அமைத்துள்ள கூட்டு என்பது, கூட்டணியல்ல'' என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: தி.மு.க., அரசின் சாதனைகளை எடுத்துச் சொல்லி, தமிழகத்தின் மண், மொழி, மானம் காக்க, தி.மு.க.,வில் உறுப்பினர்களாக இணைய விருப்பமுள்ளதா என்று கேட்கும்போது, “அரசின் திட்டங்கள் அன்றாட வாழ்விலும், குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் பயனளிக்கிறது.
அதேசமயம், அ.தி.மு.க., பா.ஜ., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அமைத்துள்ள கூட்டு என்பது, கூட்டணியல்ல. தமிழகத்தை, தமிழகத்தின் ஒற்றுமையைச் சிதைத்து, மீண்டும் நூறாண்டுகளுக்குப் பின்னோக்கித் தள்ளுவதற்கான சதித்திட்டம் என்பதை நாங்கள் உணர்ந்தே இருக்கிறோம்” என்று தெளிவாக எடுத்துச் சொல்லி ஓரணியில் தமிழ்நாடு என இணைகின்றனர் தமிழக மக்கள்!
@twitter@https://x.com/mkstalin/status/1943938151179071626twitter
விறுவிறுவென நடைபெற்று வரும் ஓரணியில் தமிழ்நாடு பரப்புரையில் இதுவரை 77,34,937 பேர் (49,11,090 புதிய உறுப்பினர்கள்) தமிழகத்தின் மண், மொழி, மானம் காக்கக் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர்.
அதிகபட்சமாக, கரூர் மாவட்ட தி.மு.க.,வினர் 41% வாக்காளர்களை உறுப்பினர்களாகச் சேர்த்து முன்னணி வகிக்கின்றனர். அவர்களை முந்தும் வகையில் பிற மாவட்ட தி.மு.க.,வினரும் மும்முரம் காட்டிடக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.













மேலும்
-
உலகின் மிகப்பெரிய உட்புற பொழுதுபோக்கு அம்சத்தை நியூ ஜெர்சியின் எடிசனில் கொண்டு வந்த ஆல்பட்ராஸ்
-
மெக்சிகோ, ஐரோப்பிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 30% வரி; அறிவித்தார் அதிபர் டிரம்ப்!
-
இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட்: சதமடித்தார் கே எல் ராகுல்
-
ஆமதாபாத் விமான விபத்து: போயிங் விமானங்களின் எரிபொருள் சுவிட்ச் பிரச்னையை 2018ம் ஆண்டில் கண்டறிந்தது அமெரிக்கா!
-
ஆளுங்கட்சியுடன் எதிர்க்கட்சியும் ஊழலில் திளைக்கும் கேரளா: அமித் ஷா சாடல்
-
காலத்தைக் கடந்து நிற்கும் காவல் அரண்மனை-செஞ்சி கோட்டை.