மெக்சிகோ, ஐரோப்பிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 30% வரி; அறிவித்தார் அதிபர் டிரம்ப்!

4

வாஷிங்டன்: ஆகஸ்ட் 1ம் தேதி முதல் மெக்சிகோ, ஐரோப்பிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 30% வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் அறிவித்தார்.


வங்கதேசம், மலேசியா, ஜப்பான் உள்ளிட்ட 14 நாடுகளுக்கு பரஸ்பர வரி விதிக்கப்படுவதாக அதிபர் டிரம்ப் கையெழுத்திட்ட கடிதங்கள் அனுப்பப்பட்டன. இந்த வரி விதிப்பு அடுத்த மாதம் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. பின்னர், பிரேசிலுக்கு 50 சதவீத வரி விதித்து டிரம்ப் உத்தரவிட்டார்.


பிரேசில், அல்ஜீரியா, புருனே, ஈராக், லிபியா, மால்டோவா, பிலிப்பைன்ஸ் மற்றும் இலங்கை ஆகிய 8 நாடுகளுக்கு, புதிய வரி விதிப்பு குறித்து கடிதங்கள் அனுப்பப்பட்டு உள்ளன. ஆகஸ்ட் 1ம் தேதி முதல் கனடா பொருட்களுக்கு 35 சதவீத வரி அமலுக்கு வரும் என டிரம்ப் அறிவித்தார். அவர், தொடர்ந்து பல்வேறு நாடுகளுக்கு அதிக வரி விதிப்பில் ஆர்வம் காட்டி வருகிறார்.


இந்நிலையில் இன்று ஆகஸ்ட் 1ம் தேதி முதல் மெக்சிகோ, ஐரோப்பிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 30% வரி விதிக்கப்படும் என டிரம்ப் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

Advertisement