உலகின் மிகப்பெரிய உட்புற பொழுதுபோக்கு அம்சத்தை நியூ ஜெர்சியின் எடிசனில் கொண்டு வந்த ஆல்பட்ராஸ்

நியூ ஜெர்சி : அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் உள்ள எடிசனில் உலகின் மிகப்பெரிய உட்புற பொழுதுபோக்கு சார்ந்த மினி புட்டிங் மற்றும் ஆடம்பர அம்சங்கள் நிறைந்த பல்வேறு அம்சங்களை ஆல்பட்ராஸ் நிறுவி உள்ளது. இதன் பிரமாண்ட திறப்பு விழாவல் எடிசன் நகர மேயர் சாம் ஜோஷி மற்றும் உள்ளூர் சிறப்பு விருந்தினர்கள் பலர் கலந்து கொண்டனர். இதில் உள்ள பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களை கண்டு வியந்தனர்.
991 US-1ல் எடிசனில் சிறந்த இடத்தில் அமைந்துள்ளது ஆல்பட்ராஸ். ஆல்பட்ராஸின் இந்த இடம் சூப்பர்சார்ஜ்டு என்டர்டெயின்மென்ட்டுக்கு அருகில் மற்றும் டாப்கால்ப்-இன் எதிரே, நியூ ஜெர்சியில் சமூக பொழுதுபோக்கிற்கு ஒரு புதிய அளவுகோலை அமைக்கிறது. இந்த இடம் 50,000 சதுர அடிக்கு மேல் பரவி உள்ளது. இதில் வியக்கவைக்கும் அம்சங்களான, ‛மினி புட்டிங், உயர்தர பவுலிங், உயர்ந்த உணவு அனுபவம், கைவினை காக்டெயில்கள்' போன்றவை துடிப்பான இரவு வாழ்க்கையை வழங்குகிறது. ஒரே இடத்தில் விளையாட்டு மற்றும் ஆடம்பரமான ஓய்வையும் தடையின்றி வழங்குகிறது.
இதுபற்றி ஆல்பட்ராஸ் நியூ ஜெர்ஸியின் தலைவர் ஸ்டீபன் சங்கர்மானோ கூறுகையில், ‛‛எங்கள் பிரமாண்ட திறப்பு ஒரு அற்புதமான கொண்டாட்டமாக இருந்தது. ஆல்பட்ராஸில் விருந்தினர்களை வரவேற்க நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இது வெறும் பொழுதுபோக்குக்கான இடம் மட்டுமல்ல, மறக்க முடியாத மற்றும் ஒப்பற்ற ஒரு சமூக விளையாட்டு மைதானமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மினி புட்டிங் மற்றும் ஆடம்பர பவுலிங் முதல் கைவினை காக்டெயில்கள், வைப் தரும் உணவு அனுபவம் மற்றும் நேரடி டிஜேக்கள் வரை பல்வேறு அம்சங்கள், உண்மையில் வேறு எங்கும் இல்லாத ஒரு இடமாக இது இருக்கும்” என்றார்.
எடிசன் மேயர் சாம் ஜோஷி கூறுகையில், ‛‛ஆல்பட்ராஸ், எடிசனுக்கு ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும். உலகதரம் வாய்ந்த பொழுதுபோக்கு, 350-க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் மற்றும் எங்கள் முழு சமூகத்திற்கு ஆற்றலைத் தருகிறது. இது உள்ளூர் பொருளாதாரத்தை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், $175,000 மதிப்பிடப்பட்ட வரிகளுடன், குடும்பங்கள், நண்பர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு இணைந்து மகிழ்ச்சியாக இருக்க ஒரு புதிய மற்றும் உற்சாகமான இடத்தை வழங்குகிறது. இப்படிப்பட்ட ஒரு துடிப்பான மற்றும் புதுமையான இடத்திற்கு எடிசன் வீடாக இருப்பது பெருமையாக உள்ளது” என்றார்.
ஆல்பட்ராஸ்-ல் உள்ள சிறப்புகள்
* உலகின் மிகப்பெரிய உட்புற தீம் கொண்ட மினி புட்டிங் கோர்ஸ் சாதாரண மற்றும் விளையாட்டு போட்டிக்கு வடிவமைக்கப்பட்டுள்ளது.
* 32 உயர்ந்த ஆடம்பர பவுலிங் லேன்கள், அனைத்து நிலைகளிலும் போட்டிக்கு ஏற்ற சிறந்த விளையாட்டு இரவு அனுபவம் உள்ளது.
* கைவினை காக்டெயில்கள், உயர்ந்த சுவையான உணவுகள் உள்ளன.
* நேரடி டிஜே இசை மற்றும் மூழ்கவைக்கும் பொழுதுபோக்கு ஆற்றலைத் தக்கவைக்கிறது.
* பல்துறை மற்றும் விசாலமான தனியார் குழு நிகழ்வு இடம், எல்லா சந்தர்ப்பங்களுக்கும் ஏற்றது.
விலை, பரிசு அட்டைகள் மற்றும் குழு பயணங்களுக்கான தகவலுக்கு https://www.albatrossnj.com என்ற லிங்க்கை பார்வையிடவும்.
ஆல்பட்ராஸின் நேரங்கள் : திங்கள் முதல் வியாழன் வரை, காலை 11 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை, வெள்ளி காலை 11 மணி முதல் அதிகாலை 1 மணி வரை, சனி காலை 10 மணி முதல் அதிகாலை 1 மணி வரை, மற்றும் ஞாயிறு காலை 10 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை.
பேஸ்புக்கில் தொடர... https://www.facebook.com/albratrossnj
இன்ஸ்டாவில் தொடர... https://www.instagram.com/albratrossnj/
மற்றும் டிக் டாக்கில் தொடர... https://www.tiktok.com/@albatrossnj